வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Wednesday 7 March 2018

சாசனம் என்றொரு தமிழ் சினிமா

சாசனம் என்றொரு தமிழ் சினிமா
நேற்று என் கண்ணில் பட்ட திரை மொழி

தமிழில் முள்ளும் மலரும், உதிரிப் பூக்கள்,நெஞ்சத்தை கிள்ளாதே முதலிய நல்ல திரைப்படங்களை வழங்கிய இயக்குனர் மகேந்திரன் இன்னொரு தலைசிறந்த படமான சாசனத்தை 2006 ஆம் ஆண்டு இந்தியதேசிய திரைப்பட அபிவிருத்தி கழகத்துடன் இணைந்து நமக்களித்துள்ளார் கந்தர்வனின் கதை, ஒரு சிறிய கிராமத்தின் வாழ்க்கையும் கலாச்சாரத்தையும் இது சித்தரிக்கிறது.
சாசனம் போன்ற ஒரு படத்தை தர மகேந்திரனால்தான் முடியும். இது வணிக சினிமாவின் விதிகளை மீறி நம்மோடு பேசுகிறது. சாசனம் ஒரு உண்மையான திரைப்படம், உண்மையான மக்கள் மற்றும் உண்மையான உணர்ச்சிகளைப் பற்றி சொல்கிறது. அரவிந்தசாமி இயல்பான நடிப்பின் மூலம் பாத்திர சித்தரிப்பில் ஒரு சித்து விளையாட்டையே நிகழ்த்துகிறார். கௌதமி மற்றும் ரஞ்சிதா அந்தந்த பாத்திரங்களில் உணர்ச்சிகளின் சங்கமமாக விரிகிறது.
அன்பான ஜோடி முத்தையா (அரவிந்த்சாமி) மற்றும் விசாலக்ஷி (கௌதமி) கந்தனூரில் அமைதியான வாழ்க்கை வாழ்கின்றனர். சரோஜி (ரஞ்சிதா) மற்றும் அவரது தாயார் தஞ்சாவூரில் இருந்து வந்து எங்கும் செல்லமுடியாது, முத்தையாவின் இல்லத்தில் அடைக்கலம் பெறுகின்றனர். இவர்களின் எதிர்பாராத வருகை கிராமத்தில் சலசலப்பை உண்டாக்குகிறது.
தவிர்க்க முடியாத சூழ்நிலைகள். கிராமவாசிகளிடையே உருவான முத்தையா சரோஜி உறவு பற்றிய சித்தரிப்புகள் ஊர் முழுவதும் பரப்ப்ப் பட்ட சந்தேக சொல்லாடல்கள். ஒருவருக்கொருவர் சமரசம் செய்து கொள்ள முடிந்த ஈர்ப்பின் வெளிப்பாடாய். உறவின் உருமாற்றம் பிரிக்க முடியாத காதலாய் நீள்கிறது.
இசை படத்தில் நம்மை லயிக்க வைக்கிறது ஆனாலும் சில நெருடல்கள் உண்டு.ஒளிப்பதிவும் நம்மை கதையினூடு நகர்த்திச் செல்கிறது.வெறுமையான வீதிகள் ..பல சேதிகளை சொல்கின்றன.
முத்தையா தனது மனைவியான விசாலாட்சியயை மிகவும் நேசிப்பவன் ஆனாலும் சரோஜியுடனான தவிர்க்க முடியாத உறவை அவள் ஏற்றுக் கொள்கிறாள் .சரோஜியயை தனது சகோதரியாக .
சரோஜியயை நர்த்தகியாக சித்தரிப்பதில் கொஞ்சம் தொய்வு ஏற்படுகிறது காட்டப் படுகின்ற நடனமும் கலைக் கிளர்ச்சி தருவதாக அமையவில்லை அந்த இடங்களில் நெறியாளர் இன்னமும் கவனம் செலுத்தி அதன் கலைத் தரத்தை உறுதிப் படுத்தியிருக்கலாம். சல்லா முத்து (தலைவாசல் விஜய்) படத்தின் மூலம் முத்தையாவின் நண்பராக நம்மை வசியப் படுத்துகிறார். சபீதா ஆனந்தும் போகிற போக்கில் நம்மை கவர்ந்து செல்கிறார்.
அரவிந்தசாமி அவரது உடையார், பேச்சு மற்றும் கதாபாத்திரத்தில் செட்டிநாடு மக்களை பிரதிபலிக்கிறார் . கௌதமி விசாலாட்சியாய் வாழ்ந்து காட்டியிருக்கிறார்.
கடைசி வரை கதையின் ஓட்டம் நம்மை கட்டிப்போடுகிறது

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி