மூன்றாண்டுகள் நினைவில் தோழர்.சுந்தர்
கிட்டத் தட்ட 44வருடங்களுக்கு முன் முதல் சந்திப்பு மூதூர் சேனையூரில் அதன் பின்னராக ஈழ விடுதலை இயக்கம் ஈழப் புரட்சி அமைப்பு என அரசியல் பயணம் எரிமலை தர்க்கீகம் என விரிந்த இலக்கியமும் அரசியலும் கலந்த நகர்வுகள் .

மதுரையில் ஈழ மாணவர் பொது மன்றம் 1981 உலகத் தமிழாராச்சி மகாநாட்டின் போது
ஈழப் பிரச்சினைகளை உலக தமிழ் சமூகத்தின் முன் கொண்டு சென்ற முன் நகர்வு
சத்திரப்பட்டி முதல் தமிழ் நாட்டில் சந்து பொந்துகள் வரை ஈழப்
பிரச்சினையின் தீவிரத்தை சொல்ல பொதுமை பாலம் இராசகிளி அச்சகம் என
இலக்கியமும் அரசியலுமாய் இயங்கிய காலங்கள்.இவையெல்லாம் பொது வெளியில்
பலருக்கு தெரியாத பக்கங்கள் தோழனே.
2006 ல் பாரிசில் உருவான தமிழர் திருநாள் பற்றிய தொடக்கப் புள்ளி இன்று உலகம் முழுவதும் பெரும் எழுச்சியாய் மாறியிருக்கிறது அதில் நானும் நீயும் முகுந்தனும் இன்னும் பல தோழமைகளும் சிலம்பும் அதன் வழி வந்து விரிந்த தொடர்புகளும்.
மேலைப் புலத்தில் இன்னியத்தின் அறிமுகமும் அது பற்றிய கருத்தாடலும் இன்று ஈழநாட்டியமாய் நம் கலாசார அடையாளமாய் முன்னகரும் பண்பாட்டுப் பரவலும்.உன் நினைவை உரக்கச் சொல்கிறது.
இந்த ஆண்டும் நீ இல்லாமலேயே பாரிஸ் தமிழர் திருநாள் கடந்து போனது நானும் முகுந்தனும் தனிமைப் பட்டுப் போனோமோ என்ற நினைவலைகளை கொண்டு வந்து சேர்த்தது.
எத்தனை எத்தனை நினைவுகள்

No comments:
Post a Comment