இன்னிய அணி
இலங்கையில் இன்னிய அணியின் தொடக்கம் ஒரு சுவாரஸ்யமான கதை 1990களில் நான் திருகோணமலை மேற்கு தமிழ் மகாவித்தியாலையத்தில் பிரதி அதிபராக கடமையாற்றிக் கொண்டிருந்த காலம் .வட்டார மட்டத்தில் நடந்த ஒரு நிகழ்வுக்கு சிங்கள மகாவித்தியாலையம் சார்பாக ஒரு பாண்ட் கலந்து கொண்டது அது முழுக்க முழுக்க சிங்கள பண்பாட்டு மரபுகளை அவர்களது தாள வாத்தியக் கருவிகளையும் அழகாய் வடிவமைக்கப் பட்ட கலாசார உடைகளையும் பிரதிபலித்து ஒரு பண்பாட்டு அணியாக அழகியலாய் அங்கிருந்தோர் எல்லோரையும் கவர்ந்தது.நான் பொலநறுவையில் படிப்பிக்கும் போது இத்தகைய அணிகளை அங்கு நடை பெற்ற பல விழாக்களில் கண்டிருக்கிறேன்.ஆனால் அன்றைய நிகழ்வில் திருகோணமலையில் உள்ள பல தமிழ் பாடசாலைகளின் பாண்ட் வாத்திய அணிகள் பல கலந்து கொண்டன அவை அனைத்தும் மேலைத்தேய மரபிலான பாண்ட் அணிகளாக இருந்தன.அன்றே எனக்கு ஒரு எண்ணம் ஏற்பட்டது நம் பண்பாட்டை அடிப்படையாக கொண்ட அணியயை உருவாக்க வேண்டும் என்று.ஆனால் நான் 1992ல் பல்கலைக் கழகத்துக்கு விரிவுரையாளராக சென்று விட பாடசாலையில் நான் எண்ணிய முயற்சி கை கூடவில்லை .
1993ஆம் ஆண்டு என்னுடைய "பாலசுகுமார் நாடகங்கள்' எனும் நூலின் வெளியீட்டு விழா திருகோணமலை நகரசபை மண்டபத்தில் நடை பெற்றது அவ் விழாவில் தோழர் பற்குணம் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர் அதில் அப்போதைய வடக்கு கிழக்கு மாகாண பேரவை செயலாளர் திரு.கிருஸ்ணமூர்த்தி அவர்கள் விருந்தினராக கலந்து கொண்டார்.அந்த நிகழ்வுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் மட்டக்களப்பில் கவிஞர் ஆனந்தன் வீட்டில் தூரதர்சன் நிகழ்ச்சியில் பாண்ட் வாத்தியத்துக்கு கூட்டுக் குழல் முரசம் என அழகிய தமிழ் வர்ண்ணனை போனது.நானும் ஆனந்தனும் தமிழ் பாண்ட் பற்றி பேசிக் கொண்டோம்.
அந்த நிகழ்வில் உரையாற்றிய நான் தமிழ் பாண்ட் பற்றியும் கூட்டுக் குழல் முரசம் என அழைக்கலாம் எனவும் குறிப்பிட்டேன் .அந்த நிகழ்வில் அப்போதைய உவர் மலை விவேகானந்தா அதிபர் திருமலை நவம் என் நூலை விமர்சனம் செய்ய அழைக்கப் பட்டிருந்தார்.
அவ் விழாவில் உரையாற்றிய திரு கிருஸ்ண மூர்த்தி அவர்கள் அவர் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் வித்தியானந்தன் கூத்துக்களில் பங்கு கொண்டவர் அவர் தனது உரையில் தான் உடனடியாகவே தமிழ் பாண்டுக்கு பணம் ஒதுக்குவதாகவும் உவர்மலை விவேகானந்தா பாடசாலையில் அதன் அதிபர் முன்னின்று செய்யலாம் எனவும் உறுதி மொழிந்தார்.
அதற்கான முயற்சிகளில் நானும் நவமும் பேசிக் கொண்டோம் ஆனால் சாத்தியப் படாமல் போயிற்று ஆனால் பின்னர் இரண்டோ மூன்றோ ஆண்டுகளில் கல்வி அமைச்சின் செயலாளராக வந்த திவகலாலா அவர்கள் திருகோணமலை இந்துக் கல்லூரியில் திருமதி தவசிலிங்கத்தின் மூலமாக ஒரு தமிழ் பாண்டை தவிலையும் நாதஸ்வரத்தையும் வைத்து உருவாக்கினார்கள்

No comments:
Post a Comment