வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Saturday 3 March 2018

உணர்வுகளும் உயிரோட்டமும்

உணர்வுகளும் உயிரோட்டமும்

வாழ்வு என்பது உணர்வுகளாலும் உணர்ச்சி நிரம்பியதாகவும் ஒவ்வொரு கணமும் நம்மில் மாற்றங்களையும் மறு பிரதியாக்கங்களையும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.
நாம் மனிசர் இரத்தமும் சதையும் மட்டுமல்ல நம்மில் உணர்வுகள் கலந்து மகிழ்வும் துன்பமும் மாறி மாறி வெளிப்படும் வாழ்வின் பிரதி பிம்பங்களாய் நீளும் கால வெளி.
எண் சுவைகளும் முப்பத்தியிரண்டு வகை மெய்ப்பாடுகளும் அதற்கு மேலும் விரியும் ரசானுபவங்களும் வாழ்வை நகர்த்திச் செல்லுகின்றன.
மரணங்கள் வழி வரும் நினைவுகள் நம் முன்னோர்களையும் நம்மோடு வாழ்ந்து மறைந்தவர்களையும் நினைவு கொள்ளல் காலம் காலமாக எல்லா பண்பாடுகளிலும் தொடர் கலாசாரமாய் கொண்டாடப் படுகிறது.
யேசுவின் மரணம் இரண்டாயிரம் வருசங்களுக்கு மேலாக மீள மீள நினைக்கப் படுவதும் தவக் காலமாய் வரும் கலாசாரத் தொடர்ச்சியும் ஒவ்வோராண்டும் நேற்று நடந்தது போல மீள் தொடராய் நீள நீனைந்தடியேன் என தொடர்வது வரலாறு.
தமிழர் மரபு இறந்தோரை போற்றுவதும் புகழ்வதும் மூவாயிரம் வருசங்களுக்கு முன் வாழ்ந்தோர் கல்வெட்டுகளில் நினைவு முத்திரை பொறிக்கப் பட்டு பூஜிக்கப் படுகிறார்கள் கல்வெட்டுகள் முன்னோரை கொண்டாடி பொங்கி படையலிட்டு தங்கள் பரம்பரை நீட்சியயை பேசுகிறது.
கல்லறைகள் திறக்கப் படுகின்றன வெள்ளையடிக்கப் படுகின்றன முன்னோர்களை அடுத்த சந்ததிக்கு அறிமுகப் படுத்துகின்றன
நம்மில் மரணித்தோரையும் முன்னோரையும் அவர்கள் நினைவுகளையும் கொண்டாடுவோம்.
மரணித்தோர் இலக்கியங்களில் கதைகளாய் காவியங்களாய் கவிதைகளாய் ஓவியங்களாய் இசையாய் நடனமாய் நம்மோடு வாழ்கிறார்கள்.
மரணித்தவர்கள் பற்றி கதைகள் எழுதுவோம் கவிதைகள் வடிப்போம் சிலைகள் செய்வோம்.சித்திரமாக்குவோம் உரத்த நினைவுகளால் உலகப் பரப்பில் வாழ்வு நீள வழியெங்கும் பூச்சொரிந்து கொண்டாடுவோம்.
தோழர் கால்மாக்சின் கல்லறை லண்டனில் எபோதும் உயிர்ப்புளதாகவே உள்ளது ஒவ்வோர் நாளும் யாரோ ஒரு சிலரோ பலரோ கல்லறையயை தரிசிக்கின்றனர் பூக்களாலும் மாலைகளாலும் நிறைக்கின்றனர் மெழுகுவர்த்தி ஏற்றப் படுகிறது உலகின் எங்கோ ஒரு மூலையிலிருந்து வந்தாலும் அவர் கொள்கையால் ஈர்க்கப் பட்டோர் அவர் கல்லறையயை தரிசிக்கின்றனர் கண்ணீர் விடவல்ல அந்த மா மேதையயை கொண்டாட.
மா மேதை லெனின் இறந்த போது உலம் முழுவதுமுள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்கள் எழுந்து நின்று ஒரே நேரத்தில் அஞ்சலி செலுத்தினர் இன்னமும் அவர் உடல் பேழையில் பாதுகாக்கப் பட்டு காண்போரை வியப்பில்ல் ஆழ்த்தும் குறியீடாய் உள்ளது.
உலக வாழ்வு இந்த உலகோடு முடிந்து போகிறது இந்த உலகில் வாழ்ந்தோரை இந்த உலகில்தான் நினைவு கொள்ள முடியும் கொண்டாட முடியும் மறு உலகு என்பதெல்லாம் வெறும் கற்பனை புழுகர்கள் கட்டி விட்ட கற்பனை.
மரணம் என்பது உணர்வும் உயிரோட்டமும் நிறைந்தத மரணங்கள் மறக்கப் படுவதற்கானதல்ல நினைக்க படுவதற்கானது நீள நீள சந்ததி சந்ததியாக நினைப்போம் அவர்கள் கல்லறைகளில் மலர் தூவி போற்றுவோம் புகழுவோம் பாடுவோம் கவிகளால் ஆர்ப்பரித்து அவர்கள் நினைவில் வாழ்வோம்

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி