வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Monday, 5 March 2018

கெவுளி முனை வெளிச்ச வீடு



கெவுளி முனை வெளிச்ச வீடு

மூதூர் பிரதேசத்தின் முக்கிய கேந்திர மையம் இந்த கெவுளி முனை.திருகோணமலை துறைமுகம் செல்லும் கப்பல்களுக்கு வழிகாட்டியாக குறிகாட்டியாக இந்த முனை முக்கியம் பெறுகிறது.

கெவுளி முனை பற்றிய செய்திகள் கோணேசர் கல் வெட்டில் காணப் படுகின்றன மீகாமனுடனும் கோணேசர் கோயிலுடனும் தொடர்பு பட்ட செய்திகளாய் வரலாற்றில் முக்கிய புள்ளியாய் கெவுளி முனை அமைந்திருக்கிறது.

ஆங்கிலேயர் காலத்தில் 1863ம் ஆண்டு இந்த வெளிச்ச வீடு கட்டப் பட்டதாக வரலாற்றுத் தகவல்கள் சொல்கின்றன.ஆங்கிலேயர் தங்கள் கடற்படையின் ஒரு சிறு தொகுதியினரை வைத்திருந்தனர்.

ஒரு கட்டிடத் தொகுதியும் அதனோடிணைந்த காவலரண்களும் இருந்தன சுதந்திரத்தின் பின் வெறும் வெளிச்ச வீடாகவே இவ்விடம் பயன் பட்டது.

இவ் வெளிச்ச வீடு அரச பராமரிப்பாளரால் 1980கள் வரை பராமரிக்கப் பட்டது.

மாலை ஆறு மணிக்கு ஏற்றப் படும் வெளிச்சம் காலை ஆறு மணிக்கு அணைக்கப் படும்.

இங்கிருந்து பாயும் ஓளி வெருகல் வரை பரந்ததாக சொல்லுவர்.

இந்த கடற்கரை விசேசித்த பண்பு வாய்ந்தது கடல் தாவரங்கள் இங்கு உயிருடன் காட்சியளிக்கும் அதிசயம்.

பவளப் பாறைகள் கூட்டம் கூட்டமாக வெளித்தெரியும் அழகும் கிழக்காக நீண்டு செல்லும் அழகிய கடற்கரையும் மேற்கில் கடல் அருகில் உயர்ந்து நிற்கும் சிறு குன்றும் அழகின் சிரிப்பாய் எப்போதும்.

கடற்கரையில் விரிந்திருக்கும் மணல் வெளி பளபளப்புடனான பளிங்கு காட்சியாய் சூரிய ஓளியில் மின்னிடும் அழகும் தனித்துவமானதுதான்

இங்கிருந்து பார்த்தால் கோணேசர் மலையும் கோயிலும் நமக்கு திருஞானசம்பந்தத் தேவாரமான குரைகடலோதும் நித்திலம் கொலிக்கும் என்ற வரிகள் வரலாற்று நினைவை நம்முள் இருத்தும்.

இப் பிரதேசத்தின் அழகிய சுற்றுலா தலம் இதுதான்

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி