நாங்களும் எங்கள் உணவு முறைகளும்
சேனையூர் கட்டைபறிச்சானை அடிப்படையாக கொண்ட பண்பாட்டு உணவு முறை
ஈழத் தமிழர்களின் தொன்மை மரபுகளையும் அதன் தனித்துவத்தையும் வெளிப்படுத்தும் பண்பாட்டில் உணவுப் பழக்க வழக்கம் முக்கியம் பெறுகிறது.கலாசார வாழ்வியலில் உணவு முறை என்பது நம் முன்னோர் வழியில் பயணிப்பது.
காலை உணவு
காலை உணவு பெரும்பாலும் புட்டு முக்கிய இடம் பெறும் மூங்கில் குழல் புட்டையே நான் இங்கு குறிப்பிடுகிறேன்
புட்டுக்கு பெரும் பாலும் மாசிச் சம்பல்,இறால் பொரியல் ,நேற்றைய மீன் குழம்பு,தயிரும் வாழப் பழமும் சீனியும் சேர்த்து சாப்பிட சுவையா இருக்கும்.
புட்டு மா அது வறுக்கும் முறை புட்டின் சுவையயை கூட்டும் சரியாக வறுத்த மாவை குழைக்க தண்ணீர் ஊற்றும் போதே அதில் எழும் வாசம் அது புட்டின் சுவையயயை உணர்த்தும் எங்கள் ஊர் புட்டுப் போல் நான் எங்கும் சாப்பிட்டதில்லை.
தோசை இடையிடையே பயன்பாடு உடையது இட்லி வழக்கில் இல்லை.
இடியப்பம் பாலப்பமும் சில வேளைகளில்.
தண்ணிச் சோறு தயிரும் வாழப்பழமும்
கன்சியும் தொட்டுக் கொள்ள பச்சடியும்
பால் சோறு பச்சடி
புக்கை பச்சடி
மரவள்ளிக் கிழங்கு அவியலும் திப்பிலிக் கொச்சிக்காய் சம்பலும்
இவை காலை உணவுகளாக இருந்தாலும் புட்டு முக்கிய காலை உணவு.
அப்பம் பாலப்பம் அப்பம் வெந்து வரும் போது நடுவில் தேங்காய்ப் பால் விடுதலும் அதன் மேலாக தேங்காய்ப் பூவை தூவி பின்னர் சர்க்கரையயை அல்லது சீனியயை தூவி விடுதலும் எங்கள் ஊரின் தனித் தன்மையான அப்பம்.
அப்பத்துக்கு புளிக்க வைத்தலில் ஒரு பக்குவமான முறை எங்கள் கிராமத்துக்கு உண்டு.
தம்பலகாமத்திலும் இந்த பண்பாட்டு படர்ச்சியயை காணலாம்.

No comments:
Post a Comment