வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Sunday 11 March 2018

உலகமயச் சூழலில் பாரம்பரிய கலைகள்

உலகமயச் சூழலில் பாரம்பரிய கலைகள்

உலகமயமாதல், உலகமயமாக்கல் முன்னது தானாகவே நடைபெறுவது பின்னயது இனொருவரால் அல்லது அமைப்புகளால் இயக்கப் படுவது.
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என சங்கப் புலவன் கணியன் பூங்குன்றனாரிடமிருந்து நாம் உலகமயமாதலுக்கான கருத்தை தொடங்கலாம் என நினைக்கிறேன் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டாமல் உலகப் பார்வை என்பது நம்மை புதிய கருத்துக்களின் வழி பயணிக்க வைக்கும்.
நவீனத்துவம்,பின் நவீனத்துவம் காலனித்துவம் ,நவகாலனித்துவம் ஆகிய கருத்துக்களின் வழி நம் மொழியும் பண்பாடும் எத்தகைய மாற்றங்களை பெற்றன வீம்புக்கு கையிறிழுக்கும் பின் நவீனத்துவ வாதிகளும் விதண்டாவாதத்த்தை முன்னகர்த்தி நம் ஈழத்து முற்போக்காளர்கள் செயல் பாடுகளையும் கலாபூர்வமான மரபு மீட்டெடுப்பில் நம் மரபுக்கலைகளின் தொடர்ச்சியான இருப்புக்கு களம் அமைத்தவர்களையும் கொச்சைப் படுத்தும் நவகாலனித்துவ சிந்தனையாளர்கள் இன்று உலகமயச் சூழலில் மரபுக் கலைகள் பற்றி பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.
ஈழத் தமிழரின் மரபுக் கலைகளின் மீட்டுருவாக்க செயல் பாடுகள் அறுபதுகளில் ஆரம்பித்து இன்று வரை புதிய பரிமாணங்களுடன் தொடர்கிறது.பேராசிரியர் வித்தியானந்தன் வழி வரும் கட்டமைக்கப் பட்ட செல் நெறி இந்த உலக மயச் சூழலிலும் அதன் இருப்பை தக்க வைப்பதற்கான எல்லா அடிப்படைகளினூடும் பயணிக்கிறது.
நம் மரபுக் கலைகள் அவற்றின் வாழ்நிலை நம் மக்கள் மத்தியில் சடங்குகளினூடும் கொண்ட்ட்டங்களினூடும் தக்க வைக்கப் படுவதற்கான செயல் பாடுகள் தொடர்ந்து யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நடந்து கொண்டே இருக்கின்றன.
உலக மயமாதல் என்ற என்ற சொல்லாடல் தரும் பயங்ரத்தை விட சமஸ்கிருத மயமாக்கல் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டு நம் பாரம்பரிய வழிபாட்டு முறைகளையும் அதன் வழி வரும் நம் மரபுக் கலைகளையும் அழிக்கும் பேராபத்து சூழ்ந்துள்ளது.
நவகாலனித்துவ ஏகாதிபத்தியத்தை உருவாக்குகின்ற அரச சார்பற்ற நிறுவனங்களின் கொடைகளில் தங்கி வாழ்பவர்களும் அவற்றுக்கு ஊதுகுழல் வாசிப்பவர்களும் உயர்கல்வி பீடங்களின் தளகர்த்தர்களாக செயற்படும் காலத்த்தில் அவர்களே உலகமயம் பற்றி பேசுவதும் விவாதிப்பதும் வேடிக்கையிலும் வேடிக்கை.
உலகம் முழுவதும் அந்த அந்த நாட்டுக்குரிய மரபுக் கலைகள் உலக நாகரிக மாற்றங்களுக்கு ஏற்ப தம் பழமை மாறாமல் புதிய சவால்களை எதிர்கொண்டு தக்க வைத்துள்ளன.
யப்பானிய கபுகியும்,நோவும்,பீகிங் ஒபேராவும்.இந்திய கதகளியும் யக்சகானமும் ,தெருக்கூத்தும் இன்னும் இன்னோரன்ன பிற கலைகளும் உலக மயமாக்கலினால் சுருண்டு போய் விடவில்லை.
நான் இங்கு எல்லா நாட்டு மக்களின் கலைகளையும் பார்க்கிறன்.உலக மயமாதல் அவர்களை ஒன்றும் செய்து விடவில்லை

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி