வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Saturday, 3 March 2018

மனம் நடுங்க...

மனம் நடுங்க...
பிஞ்சு மழலைகள்
எஞ்சியிருக்கும்
இந்த உலகு
மனிதம் விலை போகும்
உலைக் களமாய்
ஹிட்லர் காலத்தை விட
மோசமாய் யுத்தம்
காவு கொள்ளும்
சிரிய மண்
வல்லாதிக்க
வல்லூறுகள்
காவல் இருக்க
சொல்லில் செயலில்
வரலாற்றின் முகங்கள்
காயம் பட்டு
கறுப்பு துணியில்
முகம் மூடி
நீதி தேவன்
மயக்கம் கொள்ள
மனம் நடுங்கும்
காட்சிகளால்
எதுவும் செய்ய
வழியின்றி
மனித உரிமை பேசும்
ஐநாவும் அகிலமும்

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி