சேனையூர் கட்டைபறிச்சானும்
அமுது கொடுத்தலும்
அமுது கொடுத்தல் சேனையூர் கட்டைபறிச்சான் பிரதேசத்தின் தனித்துவ கலாசார பண்பாட்டு நிகழ்வாகும்.
வேளாண்மையும் மந்தை வளர்ப்பும் சேனயூர் கட்டைபறிச்சானில் அன்று தொட்டு இன்று வரை நிகழும் பொருளாதார நடவடிக்கைகள் ஆகும் இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்பு பட்டவை.
வருடந்தோறும் விவசாயத்தால் வரும் சந்தோசத்தை மற்றவர்களுக்கு அமுதளித்து கொண்டாடும் மரபு சேனையூர் கட்டைபறிச்சான் மக்களின் மண்சார்ந்த கலாசார மரபு.
வேளான்மை வெட்டு முடிந்த பின் நெல்லும் அது சார்ந்த பொருட்களும் வீடு நிறைந்திருக்கும் போது இந்த அமுது கொடுத்தல் மரபாக இருந்தது.
ஒரு நல்ல நாளில் இன்று அமுது கொடுக்கப் படும் என ஊருக்கி ஒரு பொது அறிவிததல் கொடுக்கப்படும்.தகவல் செய்தியாக பரப்பப் படும் அனேகமாக வெள்ளிக்கிழமைகளில்தான் அமுது கொடுப்பார்கள்.ஊரில் உள்ள எல்லோருக்கும் அறிவிக்கப் படும்.ஊரே கூடும்.
பெரும் பாலும் வசதியில்லாதவர்கள் இந்த நிகழ்வில் பெருமளவில் பங்கு கொள்வர்.மதியம் தொடங்குகின்ற அமுது கொடுத்தல் மாலை வரை நீளும்.ஏழுவகையான கறி தயிர் பழம் பலகாரம் என பூரணமான சாப்பாடாக அமையும்.
பந்தி வைத்து தாமரையிலையில் பரி மாறும் படையலாய் அமையும்.பசித்திருந்த பிழை பொறுத்து பசியாறுங்க என்ற முன்னுரையுடன் அமுது படைத்தலும் பசியாறும் அமுது கொடுத்தல் தொடரும்.
அன்றய நாட்களில் உடையார் ஐயா வீடு,சிவக்கொழுந்து ஐயா வீடு ஆகியவற்றில் வருடந்தோறும் நான் அமுது சாப்பிட்டிருக்க்கிறேன்.
வருடத்தில் ஒரு நாள் ஏழை மக்களுக்கு அறுசுவை உணவு கிடைத்தது

No comments:
Post a Comment