வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Sunday 11 March 2018

கூத்து மீளுருவாக்கம் சில உண்மைகள்

கூத்து மீளுருவாக்கம்
முகவெளியில் நான் முன்னரும் இவ் விடயம் பற்றி நான் எழுதியுள்ளேன்.தாசிசியஸ் பவள விழாவில் நூல் அறிமுகம் செய்த பேராசிரியர் மு.நித்தியானந்தன் தான் நீண்ட நாட்களின் பின் சென்ற ஆண்டு இலங்கை சென்ற போது ஒரு கருத்தமர்வில் கலந்து கொண்டதாகவும் அங்கு கூத்து மீளுருவாக்கம் பற்றி கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களும் விரிவுரையாளர்களும் கருத்துரை செய்த போது கூத்து மீளுருவாக்கம் 2003ல் இருந்துதான் ஆரம்பமாகிறது என வாதிட்டதாகவும் தான் அதிர்ந்து போனதாக குறிப்பிட்டு 1960களிலிருந்து வித்தியானந்தனினால் முன்னெடுக்கப் பட்ட கூத்து மீளுருவாக்க செயல் பாடு என விதந்துரைத்து கிழக்குப் பல்கலைக்கழகம் பிழையாக வரலாற்றை திரிபு படுத்துகிறது என ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அவர் கூறியது முற்றிலும் சரியானாலும் பொத்தாம் பொதுவாக எல்லா விரிவுரையாளர்களையும் மாணவர்களையும் நாம் சொல்லிவிட முடியாது.இத்தகைய விதண்டா வாதத்தை முன் வைப்பவர்கள் ஒரு குழுவினர் மாத்திரமே.
ஈழத்து கூத்து மீளுருவாக்கம் 1960களில் பேராசிரியர் வித்தியானந்தனால் முன்னெடுக்கப் பட செல்லையா அண்ணாவியார் துணையிருக்க பேரா.சிவத்தம்பி,பேரா.கைலாசபதி,பேரா.சண்முகதாஸ்,பேரா.மெளனகுரு என ஒரு கல்வி பாரம்பரியமே இதில் பங்கு கொள்கின்ற வரலாற்றை பார்க்கிறோம்
தொடர்ந்து தாசிசியஸ்,இளையபத்மநாதன்
இதன் வழி இன்று வரை பலர் இந்த வரலாற்றில் வருகின்றனர்.
பேராசிரியர் வித்தியானந்தனுடன் துணையாய் நின்ற வித்துவான் கமலநாதன்,அரச அதிபர் தேவனேசன் நேசையா என பலர்.
அவர் கூத்துகளில் பங்கு பற்றிய பேரின்பராசா,அழகரெத்தினம்,ஜீவரத்தினம் ,கிருஸ்னமூர்த்தி என வரும் கல்வியாளர்கள்.
பேரா.வித்தியானந்தன் நடத்திய அண்ணாவிமார் மகாநாடு ஈழத்து கூத்து மீளுருவாக்க வரலாற்றின் மையப்புள்ளி எனலாம்.
1960களிலேயே பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பறைமேளக்கூத்தை ஆனைக்குட்டி அண்ணாவியார் மூலம் அறிமுகப் படுத்தியமை முக்கிய நிகழ்வு.
கூத்து மீளுருவாக்க முயற்சியில் பேரா.சிவத்தம்பி வன்னியல் நடத்திய நாட்டார் கலை விழா புதிய தரிசனங்களை தந்தது.
பேரா.மெளனகுருவின் சங்காரம் முதலான படைப்புகளும்.ராவணேசனின் மீள் தயாரிப்பும் அவரது ஆய்வு முயற்சிகளும் அவருக்கு துணை நின்ற நாகமணிப்போடி அண்ணாவியார்,தம்பிராஜா அண்ணாவியார்,நல்லதம்பி அண்ணாவியார் இன்னும் அவர் மாணவர்களும் கூத்து மீளுருவாக்க முன்னோடிகளே.
இதன் ஒரு கிளையாக ஆரையம்பதி மு.கணபதிப்பிள்ளை,கல்லாத்து நடராசா மாஸ்ரர்,ஆரையம்பதி அண்ணாவியார் நல்லலிங்கம்,திருமறைக் கலாமன்றம் மரியசேவியர் அடிகளார் மெற்றாஸ் மெயில்,காரைசுந்தரம் பிள்ளை என கூத்து மீளுருவாக்க வரலாறு நெடியது

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி