கூத்தில் நிமிர்ந்து
ஈழ நாட்டிய கனவை விதைத்த மகள்
200 ஆம் ஆன்டு பேராசிரியர் மெளனகுரு இராவணேசன் தயாரிப்புக்காக கிட்டத்தட்ட ஒரு வருட பயிற்சியயை ஆரம்பித்தார்.அந்த பயிற்சியில் நான் உட்பட பல விரிவுரையாளர்களும் இணைந்து கொண்டனர் மகள் அனாமிகாவும் இணைந்து கொண்டாள் பெரும்பாலும் மாலை நேரங்களிலும் சனி ஞாயிற்றுக் கிழமைகளிலும் பயிற்சிகள் நடை பெறும் மிகக் கடுமையான பயிற்சிகள் நான் வேலைகள் காரணமாக பயிற்சிகளை தவற விட்டாலும் அவள் நாட் தப்பாமல் நேரம் தவறாமல் கலந்து கொள்வாள் .

பயிற்சியில் அவளது திறன் அசாத்தியமானதாக இருந்தது.அதனால் பல வேளைகளில்
அவளை முன்னுக்கு விட்டு மற்றவர்களுக்கு பயிற்சியயை வழி நடத்துவார்.அவள்
பரதமும் படித்தாள் என்பதால் அவள் ஆட்டத்தில் அடவுகள் அற்புதமான காட்சிகளாக
விரிந்து வியப்பை தரும்.
வீட்டில் அவளை ஆடச் சொல்லி பார்த்து பார்த்து மகிழ்வேன்.
அவழின் ஆடல் திறனை நானும் பேராசிரியர் மெளனகுரு அவர்களும் அடிக்கடி பேசிக்கொள்வோம் அப்போது உருவானதுதான் என் ஈழ நாட்டியக் கனவு.
2002ஆம் ஆண்டு நடை பெற்ற கூத்து பற்றிய கருத்தரங்கில் பேராசிரியர் மெளனகுருவின் கூத்து விளக்க செயல் முறை விளக்கத்துக்கு அனாமிகா ஆடிக் காட்டி விளக்கி நின்றாள்.
அரச வரவு
அரசி வரவு
வீரர் ஆட்டம்
தேரேற்றம்
நாலடி
பொடியடி
எட்டுப் போடுதல்
வேறு பட்டு வரும்
வீரர் வரவு
எதிர் நாயகர்கள் ஆட்டம்
குத்தி எழுந்து சுழன்று கிறுகி ஆடல் என
எல்லா ஆட்ட வகைகளிலும் அவள் கால்கள் சுழன்று சுற்றி கூத்தின் அழகை நம் மனங்கள் குதிக்க வைக்கும் ஆட்டக் கோலங்களாய் விரியும்
எப்படி பரத நாட்டியத்துக்கு தனியொருவரைக் கொண்டு அரங்கேற்றம் செய்யப் படுகிறதோ அதே போல மட்டக் களப்பு வடமோடிக் கூத்துக்கு அனாமிகாவை வைத்து ஒரு அரங்கேற்றம் செய்வது அதனை 2005 ஆம் ஆண்டு செய்வது எனவும் தீர்மானித்தோம்.
ஆனால் 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 சுனாமி எல்லாக் கனவுகளையும் கழுவிக் கொண்டு நிர் மூலமாக்கிக் கொண்டு சென்றது

No comments:
Post a Comment