அரங்கவியலாளனாக நான்
எனக்கும் நாடகத்துக்குமான தொடர்பு ஐம்பது வருடங்கள் கடந்த வரலாறு.ஒன்பது வயதில் என் ஆசப்பா கலாபூசணம் வில்லுப்பாட்டு வீரசிங்கம் அவர்களால் முதல் மேடையேற்றம் கண்ட நான் இன்று வரை எத்தனை எத்தனை அரங்குகள் பல நாடுகள் கடந்து செல்லும் அரங்க செயல் பாடுகள் அற்புத அனுபவங்களாய் என்னுள் தொடர்கிறது.
இன்றய சேனயூர் மத்திய கல்லூரி 1961 முதல் 1976 வரை என் அரங்க அனுபவத்துக்கான முதல் களம்.மாணவர் மன்றங்களில் இசையும் அசைவுமாய் தொடங்கிய நாட்கள் பின்னர் ஒவ்வொரு பருவத்துக்குமான நாடக நிகழ்வுகளாய் விரிவடைந்தது.பாடப் புத்தகங்களில் உள்ள நாடகங்களை நடித்தல் ஆசிரியர்கள் எழுதிய சிறிய நாடகங்களில் நடித்தல் என ஒரு தொடர் செயல் அரங்காய் செயல் பட்ட காலங்கள்.
இடைநிலை வகுப்புகளில் நாடக ஆசானாய் வாய்த்தவர் கேணிப் பித்தன் எனும் ஆசிரியர் ச.அருளானந்தம் அவர்கள்.அவரது
1.பழிக்குப் பழி
2.புரட்சித் துறவி
இரண்டு நாடகங்களும் மூதூர் திருகோணமலை என பேசப் பட்ட நாடகங்கள் பல மேடையேற்றங்களை கண்டது .
உயர் வகுப்பு கற்கும் போது வ.அ.இராசரத்தினம் அவர்களின் விபீசணனை வைத்து பின்னப் பட்ட 1.இவனும் ஒரு தம்பி -இதிகாச புனைவு
2.காகிதப்ப்பூக்கள் சிரிக்கின்றன
அரசியல் நையாண்டி நாடகம் பெரிதும் பேசப் பட்டவை.
இவை தவிர நானே எழுதி தயாரித்த பல நாடகங்கள்.
சேனையூர் வர்ணகுலப் பிள்ளையார் கோயில் திருவிழாக்களிலும் ,சிவராத்திரி விழாக்களிலும், நடித்த பல நாடகங்கள்.குறிப்பாக
1.அமரேந்திரா
2.கடல் அலைதான் ஓயாதோ
3.மார்க்கண்டேயர்
4.கடவுள் வந்தார்
பல சமூக நகைச்சுவை நாடகங்கள்.
என் ஆசான் திரு.தா.ஜெயவீரசிங்கம் அவர்களின் தயாரிப்பில் உருவான.கட்டைபறிச்சான் இந்து இளைஞர் மன்றத்தின்
1.நெப்போலியன்
நாடகத்தில் அவன் மனைவி வலன்டீனாவாக நடித்தது
நான் சசீஸ்குமார்,இரத்தினசிங்கம்,ஜெயம்,நவரெத்தினம், இணைந்து போட்ட திடீர் நாடகங்கள்
1991 திருகோணமலை விபுலானந்தா கல்லூரி
1.ஜூலிய சீசர் சீசராக எனது இயக்கத்தில் நானே நடித்தது.
6)பேராசிரியர் மெளனகுருவின் நெறியாள்கையில்
1978ல் யாழ்ப்பாணப் பல்கலை கழகத்தில்
1.புதியதொரு வீடு
2.சங்காரம்
1993ல் கண்ணகி குளிர்த்தி
1994ல் மீண்டும் புதியதொரு வீடு
கிழக்குப் பல்கலைக் கழகத்தில்
2001ல் இராவணேசன்
2003ல் லயம் நிகழ்வு
1995ல்பேராசிரியர் இராமானுஜம் இயக்கத்தில் இந்தியாவில்
செம்பவளக்காளி நாடகம்
சென்னை மீயுசியம் அரங்கில்
2001தொடக்கம்2003 வரை
பேரசிரியர் கே.ஏ.குணசேகரன் இயக்கத்தில்
1.தொடு
2.கோப்பு
நாடகங்கள் தமிழ் நாட்டின் பல மேடைகள்
தன்னானே இசைக் குழுவினருடன் பாடகராக தமிழ் நாட்டின் பல ஊர்களிலும்
2008 தமிழர் திருநாள் பாரிஸ்
கட்டியக் காரனாக
பாடசாலகளில் ஆசிரியராக பணியாற்றிய போது பல நாடங்கள் மேடையேற்றம்.
1989-1990களில் சேனையூர் மத்திய கல்லூரி
1.அபஸ்வரம்
2.சங்காரம்
1991-1992திருகோணமலை விபுலானந்தா கல்லூரி
எவடம் எவடம் புளியடி புங்கடி
1.மாதர் தம்மை இழிவு செய்யும் மடைமையயை கொழுத்துவோம்
2.எவடம் எவடம் புளியடி புங்கடி
3.சூழலைக் காப்போம்
4.எங்களை வாழ விடுங்கள்
5.மானுடம் வென்றதம்மா
6.முன்னொருகாலத்திலே
7.வானம் நமக்கொரு வரையறையா
இவையனைத்தும் நான் எழுதி இயக்கிய நாடகங்கள்
1995 மட்டக் களப்பு இந்துக் கல்லூரி
1.கருஞ்சுழி
1995 சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிலையம்
1.சாபவிமோசனம்
1992-2005 கிழக்குப் பல்கலைக் கழக விரிவுரயாளராக
எனது நெறியாள்கையில் உருவான நாடகங்கள்
1.ஆற்றைக் கடத்தல்
2.செம்பவளக்காளி
3.புழுவாய்ப் பிறக்கினும்
4.கொங்கைத்தீ
5.பாரதி பிடித்த தேர் வடம்
6.மானுடா
7.குறிஞ்சிப் பாட்டு
8.கருஞ்சுழி
2003 பான்டிச்சேரி பல்கலக் கழகம்
1.தனித்திருக்கப் ப்ட்டவர்கள்
2007 இன்னியம் லண்டன்
2008 இன்னியம் பிரான்ஸ்
2009 இன்னியம் நோர்வே
2011 ஈழநாட்டியம் நோர்வே
2013 ஈழநாட்டியம் லண்டன்
2015 ஈழநாட்டியம் நோர்வே
1993 முதல் இன்றுவரை நான் அரங்கியல் தொடர்பாய் வெளிவந்த எனது நூல்கள்
1993பாலசுகுமார் நாடகங்கள்
1995தமிழில் நாடகம்
1996திருகோணமலை நாடக அரங்க பாரம்பரியம்
1997உலக நாடக அரங்கு
1998 சூர்ப்பனகை இடது கை வாங்கிய இராவண தனுசு
2009 ஈழத்தில் கண்ணகி கலாசாரம் .சென்னை
2010 ஈழத்தமிழர் இசையும் நடனமும்
2011 Eezam tamil dance and music
2013 ஈழநாட்டியம்
2015 கும்பம் ஒரு பண்பாட்டியல் குறிப்பு
ஒரு அரங்கவியலாளனாக நான் சிறப்புப் பெற என்னை உருவாக்கிய அரங்க ஆளுமைகள் இவர்களிடம் நான் கற்றுக் கொண்டவைகள் ஏராளம்
1.கலாபூசணம்.வில்லுப்பாட்டு வீரசிங்கம்-சேனையூர்
2.கலாபூசணம்.கேணிப்பித்தன்.ச.அருளானந்தம்
3.இலக்கிய கலாநிதி.வ.அ.இராசரெத்தினம்
4.திரு .தா.ஜெயவீரசிங்கம்
5.பேரசிரியர்.சு.வித்தியானந்தன்
6.பேராசிரியர்.கா.சிவத்தம்பி
7.பேராசிரியர்.கா.கைலாசபதி
8.பேராசிரியர்.அ.சண்முகதாஸ்
9.பேராசிரியர்.சி.மெளனகுரு
10.பேராசிரியர்.வே.இராமனுஜம் --தமிழ் நாடு
-நடிப்பு,நெறியாள்கை
11.பேராசிரியர்.கே.ஏ.குணசேகரன் - பாண்டிச்சேரி.;தலித் அரங்கு ,மண்ணின் கலைகள்
12.பத்மசிறி.ந.முத்துசாமி-;சென்னை கூத்துப் பட்டறை --நாடகமொழி
13.பேராசிரியர்.கே.ஏ.ராஜேந்திரம்-டெல்லி தேசிய நாடகப் பள்ளி -நாடகவாக்கம்
14.பேராசிரியர்.பசுவலிங்கையா- மைசூர்; உடல் மொழி அரங்க கட்டமைப்பு
15.பேராசிரியர்.இராமமூர்த்தி-கர்நாடகா;ஒளியமைப்பு
16.பேராசிரியர்.இந்திரா.பார்த்தசாரதி-சென்னை;--நாடக பாடம்
17.பேராசிரியர்.இரா.இராஜு-பாண்டிச்சேரி; நடிப்பு,களரி பயிற்சி
18.பேராசிரியர்.க.ஆறுமுகம்-பான்டிச்சேரி;-தெருக்கூத்து
19.பேராசிரியர்.அங்குர்-அசாம்;--அரங்க வரலாறு,நாடகவாக்கம்
20.பேராசிரியர்.எம்.பி.சீனிவாசன் ;தமிழ் நாடு; --அரங்க காட்சியமைப்பு
21.பேராசிரியர் பூசன் --ஹைதராபாத்;--மேடைப் பொருட்கள்
22.பேரசிரியர் .அடபாலா --ஹைதராபாத்;--ஒப்பனை
23.பேராசிரியர்.பிரசன்னா மும்பாய்;--நடிப்பு
24.பத்மசிறி.பத்மா சுப்ப்ரமணியம்;தமிழ்நாடு;--நாட்டியசாஸ்திரம் அடவுகள்
25.கலை மாமணி.சம்பந்தம்;--தெருக் கூத்து
26.கலமாமணி.கண்ணன்;-தேவராட்டம்
27.பேராசிரியர்.மு.ராமசாமி:நடிப்பு
28.பேராசிரியர்.பிரேம்:நாடக இலக்கியம்
நான் சந்தித்த நம் மரபு வழி அரங்க ஆளுமைகள்
1 திரு.செல்லையா அண்ணாவியார்
2.திரு.ஆனைக்குட்டி அண்ணவியார்
3.திரு.நாகமணிப்போடி அண்ணவியார்
4.திரு.நல்லதம்பி அண்ணவியார்
5.திரு.தம்பிராஜா அண்ணவியார்
6.திரு.கல்லாத்து நடாராஜா மாஸ்ரர் அண்ணவியார்
7.திரு.பாலகப் போடி அண்ணவியார்
8.திரு.தம்பிராஜா அண்ணவியார்
9.திரு.நல்லலிங்கம் அண்ணவியார்
10.கலை மாமணி புரசை .கண்ணப்பதம்பிரான் .தெருக்கூத்து. தமிழ் நாடு இந்தியா
11.கலைஞர்.எச்.எஸ்.வேணு-கூடியாட்ட கலைஞர்.இரிஞாலகுடா, கேரளா
இவர்களிடம் நான் நேரடியாக கற்கா விட்டாலும் அவர்களது அனுபவங்களிலிருந்து நிறையவே பெற்றுக் கோன்டேன்.
அரங்கியல் பயணத்தில் அரங்க கற்கைகளால் அனுபவத்தால் கிடைத்த பதவிகள்.1998-2000 வரை அரச தமிழ் நாடக குழு உறுப்பினராக இருந்த போது இலங்கையெங்கும் பயணிக்க கிடைத்த வாய்ப்பும் பல அரங்கியல் பயிலரங்குகளை கொழும்பு மலயகம் தென்னிலங்கை பகுதிகளில் நடத்தியமையும்.சிங்கள நாடக கலைஞர்களான தர்மசிறி பண்டார நாயகா,பராக்கிரம நிரியல்ல,எச்.ஏ.பெரேரா ஆகியோரின் தொடர்பும் எனக்குள் புதிய அனுபவங்களை பெற்றுத் தந்தன.
கொழும்பு தமிழ் நாடக கலைஞர்களான ராஜசேகரன்,மோகன்குமார்,ஹெலன்குமாரி,கலைச்செல்வன், கே.ஏ.ஜவாகர்,கந்தையா லெனின் மொறையஸ் மற்றும் மலையக அந்தனி ஜீவா ஆகியோரிடமான நெருக்கம் தமிழ் அரங்கின் இன்னொரு பரிமாணத்தை புரிந்து கொள்ள வாய்ப்பளித்தது.அந்த நாட்களில் நடத்தப் பட்ட நாடகப் பட்டறைகள் கொழும்பு தமிழ் அரங்கில் புதிய மாற்றங்களை கொண்டு வந்தன.
திருகோணமலையில் நான் நடத்திய பல நாடகப்ப்பட்டறைகள் என்னோடு இணைந்து பணியாற்றிய திருமலை நவம், தோழர் பற்குணம்,சிவபாலன் பன்மைக் கலைஞர் சித்தி அமரசிங்கம் பல இளம் கலைஞர்கள் எனக்கு உற்சாகம் கொடுப்பனவாய் இருந்தன.
என் அரங்க வரலாற்றில் என் அம்மாவின் பாத்திரம் முக்கியமானது பாடசாலை நாடகங்கள் நடிக்கும் போது அவற்றை மனப்பாடம் செய்து முதல் அம்மாவுக்குத்தான் நடித்துக் காட்டுவன் அவதான் என் முதல் ரசிகை.என் உறவினர்கள் எல்லோரும் என்னை ஊக்கப் படுத்தினர் என் சின்னமாமி சிவாஜியின் நடிப்பை உன்னில் காண்கிறேன் என்பார் எங்கள் சேனையூர் பிள்ளையார் கோயில் நடராசர் அரங்கில் நடிக்கும் போது என் ஆச்சியும் அம்மம்மாவும் முன்வரிசையிலிருந்து கண்கலங்க ரசிப்பர் அப்புச்சி என் நடிப்பில் சொக்கிப் போகும் தருணங்களை நான் மேடையில் நின்றே ரசிப்பேன்
எத்தனை அரங்குகள் எவ்வளவு நடிகர்கள் எத்தனை வகையான பாத்திரங்கள்
அரசனாக
மந்திரியாக
தளபதியாக
சிவனாக
நாயன்மாராக
அரசியாக
கடவுளாக
அரசியல் வாதியாக
அதிகாரியாக
இன்ஸ்பெக்டராக
கோமாளியாக
எடுத்துரைஞ்ராக
கூத்தனாக
துறைவியாக
சாதாரண மனிதர்களின் பல்வேறு பாத்திரங்களாக.
எல்லாவகை நாடகங்களிலும் நடித்திருக்கிறேன் சினிமா பாணி நாடகங்கள்,பழைய யதார்த்த பாணி வகை,நவீன யதார்த்த நாடகம்,புதிய மோடிவகை,பரிசோதனை முயற்சியான நாடகங்கள் என பயணம் நெடியது.
நடிப்பு வகை எல்லாவற்றையும் நடிக்கும் பயிற்சியாளனாக நானே இருந்திருக்கிறேன்.ரொமான்ரிக்,மெலோராமாற்றிக்,எபிக்,ஸ்ரனிஸ்லோஸ்கி முறை,பிரக்றியன் தியரி,மேயர் ஹோல்ட் முறை,குரட்டோவஸ்கியின் பாணி,அகஸ்தாபோல் என மேலைத்தேய முறைமைள் அனைத்தியும் உள்வாங்கிய நடினாக நான்.
நாட்டிய சாஸ்திரம் சொன்ன ஆங்கிகா,வாசிகா,ஆகாரிகா ,சாத்விகா எல்லாம் என்னில் கலந்தனவாய் நடிப்பின் மூலங்களை கண்டறிய முயற்சித்தேன்.
தொல்காப்பியம் சொன்ன
"நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பால் எட்டே மெய்ப்பா டென்ப" என்ற சுவைக் கோட்பாட்டை செயல் வடிவமாய் என்பயிலரங்கு பயிற்சிகளில் நடிகர்களுக்கானதாய் கண்டறிந்தேன்.
நம் மரபுக் கலையின் கூறுகள் தமிழ் நடிப்பின் மூலங்கள் என உணர்ந்தேன்
நம் மரபு வழி அரங்குகளில் நம் கூத்து மரபில் நம் தமிழ் மரபின் நடிப்பு முறைமகள் புதைந்து கிடக்கின்றன.கூத்தில் வெளிப்படும் உடல் மொழி கைகளும் கால்களும் சேர்ந்தியைந்து தொழிற்படும் உயிர்த்துவமான ஆடல் மொழி .ஒப்பனை வண்ணத்தினூடு கண்கள் புருவம் என உணர்வின் ஒளியாய் தெறிக்கும் மெய்ப்பாடுகள் நம் தமிழ் நடிப்பின் மூலங்கள்.
என் நாடக பயணத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் பலர் இணைந்து நடித்தனர் அவர்களை இந்த இடத்தில் மகிழ்வுடன் நினைவு படுத்திக் கொள்கிறேன்.
பாடசாலை நாடகங்களிலும் என் ஊரான சேனையூரிலும் கட்டை பறிச்சானிலும் சேர்ந்து இணைந்து நடித்தவர்கள் பலர்.
சசீஸ்குமார்,இரத்தினசிங்கம்,ஜெயம்,நவரத்தினம்,நாகேஸ்வரன்,மாணிக்கராஜா,கலாபூசணம்.கா.வீரசிங்கம்,செல்வன்,நடேசன் இன்னும் பலர்.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இணைந்தவர்கள் சிதம்பரநாதன்,ராஜேஸ்வரன்,பீரிஸ்,நாகேஸ்வரி,சகாயராணி,சிதம்பர நாதன்,குணசிங்கம்
கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இணைந்து நடித்தவர்கள்
கிருபாகரன்,கெளரி,சியாமளா,பாவனி,ஜெய்சங்கர்,பரமேஸ்வரி,தயாபரன்,வான்மதி,மோகனதாஸ் ,ரவிச்சந்திரன்,தவராசா,கனகரத்தினம்,க்சிவரத்தினம் என் மாணவர்கள் பலர்
தமிழ் நாட்டில் என்னோடு இணைந்து நடித்தவர்கள்
சார்லஸ்,சந்திரா,உசாரணி,மலையாளத்து சுர்ஜித்,திவ்யா,
தன்னானே அரங்கில் பாடகர் ,ஆடகராக இணைந்தவர்கள் சின்னப்பொண்ணு,வேல்முருகன்,அந்தனிதாஸ்,
ரங்கராஜன்,தேன்மொழி பேராசிரியர் கே.ஏ.குணசேகரன்
என் அரங்க வெளியயை அறிந்து கொள்ளும் பயணத்தில் பல அரங்க ஆளுமைகளை சந்தித்திருக்கிறேன்.
கலையரசு சொர்ணலிங்கம்,நடிகமணி வைரமுத்து,பிரான்சிஸ்ஜெனம்,ஏ.ரி.பொன்னுத்துரை,குழந்தை சண்முகலிங்கம்.பேராசிரியர் சரத்சந்திர,பேராசிரியர்.ஏ.ஜே.குணவர்த்தன,லடீஸ் வீரமணி,சுனில் ஆரியரத்தின.
சிவராம கரந்,வயலார் ரவி,அனுராதா கபூர்,தொம்சன்,பிரசன்னா ராமசாமி,மங்கை,நடிகர் நாசர்,பசுபதி,கலைராணி,
புரசை தெருக்கூத்து கலைஞர்கள்.பாண்டிச்சேரியில் நாடகம் பயின்ற தோழர்கள் கார்த்திகேயன்,அனிஸ்,விஜயலட்சுமி,பாலசரவணன்,அருணகிரி,முருகவேல்,கோபி,இளம் வயதிலேயே நம்மை விட்டு பிரிந்த வேலாயுதம்.சென்னைப் பல்கலை கழக பழனி.
கேரளாவில் கலாமண்டல கதகளி கலைஞர்கள்.
இரிஞாலகுடா கூடியாட்ட கலைஞர்கள்
கர்நாடகா உடுப்பி யக்சகான கலைஞர்கள்
ஆந்திர குச்சுப்புடி கலைஞர்கள்
புரசை ,காஞ்சிபுர,பாண்டிச்சேரி தெருக்கூத்து கலைஞர்கள்
தென் தமிழக கணையான் கூத்து,தேவராட்டம்,கரகாட்ட கலைஞர்கள்
தமிழ் நாடெங்கும் பயணித்து கண்ட மரபுக் கலைஞர்கள்.
அவர்தம் அளிக்கைகள் என்னுள் தந்த கலை அனுபவங்கள்.
ஈழத்தில் முல்லைத்தீவு கள்ளப்பாட்டில் பார்த்த கோவலன் கூத்தும் கலைஞர்களும்.
யாழ்ப்ப்ணத்து கத்தோலிக்க கூத்துக்களும் வட்டுக்கோட்டை கூத்துக்களும் காத்தவராயான் கூத்துக்களும் அதன் ஆற்றுகையாளர்களும் தந்த அனுபவங்கள்.
மட்டக் களப்பு கன்னங்குடாவில் வருடந்தோறும் திகட்ட திகட்ட பார்த்து மகிழ்ந்து அனுபவித்த வட மோடி தென் மோடி கூத்துக்களும் கூத்தர்களும்
என்னில் ஏற்படுத்திய மாற்றங்கள்.
எழுவான் கரையிருந்து படுவான் கரை வரை வாவி வழி நீண்டிருக்கும் ஊர்கள் தோறும் பார்த்து ரசித்த மகுடியும் ,கரகம்,வசந்தன் கொம்பு விளையாடு என அள்ளிப் பருகிய அருங்கலைகளும் ஆற்றுகையாளர்களும் தந்த கலாபூர்வ காட்சிகள்.
என் சிறு வயதில் சாலையூர் பழங்குடியினர் நிகழ்த்திய வள்ளிக் கூத்து பார்த்து அதில் லயித்துப்போன தருணங்கள் இன்னமும் எனக்கு கிளர்ச்சி தரும் ஒன்றாகவே உள்ளது

No comments:
Post a Comment