வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Sunday 4 March 2018

அனாமிகா. ... அன்று அதிகாலை

அனாமிகா. ...
அன்று அதிகாலை
அழகாகத்தான் விடிந்தது
நடக்கப்போகும் அழிவின்
கோரமுகம் எதையும்


யாரும் அறிந்திருக்கவில்லை
கல்லடி சாஸ்திரிக்கும் இது
தெரிந்திருக்கவில்லை
சுற்றியிருந்த சாமிகள்
எதுவும் எச்சரிக்கவில்லை
மக்கள் எல்லோரும் அவரவர்
வேலையில்
அனாமிகாவும்
தேவாலயம் செல்ல
தேவதையாய் புறப்பட்டாள்
அப்பா என அழகிய
கையசைப்பு
விடை பெற்றாள்
இறுதிக் காட்சி
இதுதான் என
நான் அறிந்திருக்கவில்லை
காலம் யாருக்கும்
காத்திருப்பதில்லை
கடல் புரண்டு வருவதாக
வீதியெங்கும் மக்கள் கூட்டம்
என் வீடு முழுவதும்
தஞ்சம் தேடி வந்த மனிதர்கள்
மாடி வீடு அது
கடல் வெடித்து
அண்டம் புரண்டாதக
மக்கள் பேசிக் கொண்டார்கள்
கடல் எப்படி வெடிக்கும்
எனக்குள் கேள்வி
ஊழிக் காலமோ
என உறைத்தது எனக்கு
கால்கள் அடிபட ஓடினேன்
தேவாலயம் இடிந்து கிடந்தது
எவரையும் காணவில்லை
மனைவியயை கண்டதாக
பலர் சொல்ல
மகளை கேட்டேன்
அனாமிகாவா காணவில்லை
என்றனர்
வைத்திய சாலை
பிணங்களால் நிரம்பி வழிய
மகள் மகள்
என என் மனைவியின்
அலறல்
இருவருமாய் அனாமிகா
அனாமிகா என
மனம் அல்ற
நகரெங்கும் நாயாய்
அலைந்தேன்
எங்கும் இல்லை
பிணங்களின் நடுவே
ஒவொரு உடலாய்
புரட்டிப் பார்த்தேன்
எத்தனை உடல்களை
பார்த்திருப்பேன் கணக்கில்லை
மலையென குவிந்த
மனிதப் பிணங்கள்
இரவு முழுவதும்
தேடியும் என்
மகள் இல்லை
இரவு விடியவில்லை
விழித்தே இருந்தது
தேடி அலைந்தோம்
என் மகள் இல்லை
மாமாங்க குளம்
புனித தீர்த்தம் அது
என பேசிக் கொள்வார்கள்
குளத்தில் என் மகள்
அனாமிகாவின்
உயிரற்ற உடல்
மீண்டுமொரு முறை
புனிதம் பெற்றது
மாமாங்க தீர்த்தம்
என் அனாமிகா மூழ்கி
மூர்ச்சித்து போனதால்

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி