வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Monday, 12 March 2018

வன்னித் தெய்வம்

வன்னித் தெய்வம்
தமிழ் மக்கள் மத்தியில் கிராமங்களில் குறிப்பாக ஈழத் தமிழர் மத்தியில் உள்ள நம்பிக்கைகள் சார்ந்த வழிபாட்டு முறைகள் உள்ளன .தமிழ் ஆராய்ச்சியாளர்கள் தமிழியல் சார்ந்தோர் பெருந்தெய்வ வழிபாடு சிறு தெய்வ வழிபாடு என பிரித்து பகுத்து ஆய்வுகளை மேற்கொள்கின்றனர் பல கட்டுரைகளிலும் வெளியீடுகளிலும் நாம் இதை அவதானிக்கலாம்.
பெருந்தெய்வங்கள் என பேசப் படுபவை சமஸ்கிருத மயப்பட்டவையாகவும் சிறு தெய்வங்கள் கிராமம் சார்ந்து மக்களோடு மக்களாக அவர்கள் வீடு வயல் என்பவற்றோடு நெருங்கிய தொடர்புடையதாகவும் உள்ளன.
இந்த பாகுபாடே மிகப் பிழயானது என்பேன் நான் .கிழக்கு மாகாணத்தில் பெருந்தெய்வம் கண்ணகி கண்ணகி அவர்கள் வாழ்வோடு இணைந்தவளாக பேசப் படுகிறாள்.
நம் கிராமங்களில் பல தனித்துவமான வழிபாடுகள் உள்ளன.அவற்றில் வன்னித் தெய்வ வழிபாடும் ஒன்று சேனையூர் மக்கள் வயல் காடு இவற்றோடு தம் வாழ்வை மிக நெருக்கமாக கொண்டவர்கள் காடுறை உறையும் வன்னித் தெய்வம் பற்றிய நம்பிக்கையோடு தங்கள் வயலையும் குளங்களையும் தங்களையும் காக்கும் தெய்வமாக நம்புகின்றனர்.
வன்னித் தெய்வத்துக்கான பொங்கல் இதில் ஆண்கள் மட்டுமே பங்கு பற்றுகின்றனர் வயலில் விளைந்த நெல்லை தாங்களே காட்டுக்குள் வைத்து குற்றி அரிசியாக்கி மரக் குற்றிகளை அடுப்பு கால்களாக்கி பொங்கலிடும் முறை .பொங்கலை அங்கேயே பங்கிட்டு சாப்பிட்டு உண்டு மகிழும் ஒரு வயல் வாழ்வு இது.
என் சிறு வயதில் அப்புச்சியோடு எங்கள் குளத்துச் சேனை வயல் காட்டில் இந்த நம்பிக்கை சார்ந்த நிகழ்வில் பங்கு கொண்டு சாப்பிட்ட நினைவு இன்றும் என் நினைவில் அந்த காட்டு மணத்தோடு நான்.
வயலும் வயல் சார்ந்தும் காடும் காடு சார்ந்தும் வன்னி என்ற சொல் தரும் அர்த்தம் நீண்டு செல்லும் நம் ஈழத் தமிழர் பண்பாடு தமிழ் மக்கள் மத்தியில் கிராமங்களில் குறிப்பாக ஈழத் தமிழர் மத்தியில் உள்ள நம்பிக்கைகள் சார்ந்த வழிபாட்டு முறைகள் உள்ளன .தமிழ் ஆராய்ச்சியாளர்கள் தமிழியல் சார்ந்தோர் பெருந்தெய்வ வழிபாடு சிறு தெய்வ வழிபாடு என பிரித்து பகுத்து ஆய்வுகளை மேற்கொள்கின்றனர் பல கட்டுரைகளிலும் வெளியீடுகளிலும் நாம் இதை அவதானிக்கலாம்.
பெருந்தெய்வங்கள் என பேசப் படுபவை சமஸ்கிருத மயப்பட்டவையாகவும் சிறு தெய்வங்கள் கிராமம் சார்ந்து மக்களோடு மக்களாக அவர்கள் வீடு வயல் என்பவற்றோடு நெருங்கிய தொடர்புடையதாகவும் உள்ளன.
இந்த பாகுபாடே மிகப் பிழயானது என்பேன் நான் .கிழக்கு மாகாணத்தில் பெருந்தெய்வம் கண்ணகி கண்ணகி அவர்கள் வாழ்வோடு இணைந்தவளாக பேசப் படுகிறாள்.
நம் கிராமங்களில் பல தனித்துவமான வழிபாடுகள் உள்ளன.அவற்றில் வன்னித் தெய்வ வழிபாடும் ஒன்று சேனையூர் மக்கள் வயல் காடு இவற்றோடு தம் வாழ்வை மிக நெருக்கமாக கொண்டவர்கள் காடுறை உறையும் வன்னித் தெய்வம் பற்றிய நம்பிக்கையோடு தங்கள் வயலையும் குளங்களையும் தங்களையும் காக்கும் தெய்வமாக நம்புகின்றனர்.
வன்னித் தெய்வத்துக்கான பொங்கல் இதில் ஆண்கள் மட்டுமே பங்கு பற்றுகின்றனர் வயலில் விளைந்த நெல்லை தாங்களே காட்டுக்குள் வைத்து குற்றி அரிசியாக்கி மரக் குற்றிகளை அடுப்பு கால்களாக்கி பொங்கலிடும் முறை .பொங்கலை அங்கேயே பங்கிட்டு சாப்பிட்டு உண்டு மகிழும் ஒரு வயல் வாழ்வு இது.
என் சிறு வயதில் அப்புச்சியோடு எங்கள் குளத்துச் சேனை வயல் காட்டில் இந்த நம்பிக்கை சார்ந்த நிகழ்வில் பங்கு கொண்டு சாப்பிட்ட நினைவு இன்றும் என் நினைவில் அந்த காட்டு மணத்தோடு நான்.
வயலும் வயல் சார்ந்தும் காடும் காடு சார்ந்தும் வன்னி என்ற சொல் தரும் அர்த்தம் நீண்டு செல்லும் நம் ஈழத் தமிழர் பண்பாடு

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி