வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Saturday 3 March 2018

சமூகங்களின் வரலாறு

சமூகங்களின் வரலாறு
இன்று உலகம் முழுவதும் வாழும் சமூகங்கள் தங்கள் பூர்விகத்தை தேடுவதும் அதனை கண்டடைவதும் அதன் மூலம் தங்கள் கலாசார பாரம்பரியங்களை அறிந்து அவற்றை கொண்டாடுவதும் தம் வருங்கால சந்ததியினருக்கு தங்கள் பெருமைகளை உணர்த்துவதும் ஒரு மரபாய் ஆதிச் சமூகங்களின் வரலாறய் அவர்கள் பண்பாட்டு தனித்துவத்தை உலகுக்கு வெளிப்படுத்துகின்றன.
தென்னமரிக்க மாயன் குலம்,அவுஸ்ரேலிய பழங்குடிகள்,ஆபிரிக்காவில் பிரதேசத்துக்கு பிரதேசம் தனித்துவ குணாம்சம் கொண்ட பழங்குடிகள் தங்கள் பூர்விகத்தை நோக்கிய தேடல்கள் நவீன மீட்டுருவாக்கத்திற்கு துணை செய்வனவாகவும் தொன்மை நினைவுகளை வரலாற்றுப் பெருமைகளாக கொண்டாடுவதை சமூகங்களின் வரலாறு நிருபிக்கிறது.
குறிப்பாக இங்கிலாந்து நாட்டுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் கூலிகளாக கொண்டு வரப் பட்ட ஆபிரிக்க சமூகங்கள் அண்மைய வரலாற்றில் தங்கள் பழமைகளை மீட்டெடுத்துள்ளன மேலைத் தேய பண்பாட்டுடன் தங்களை அப்படியே கரைத்துக் கொள்ளாமல் தங்கள் உடை,உணவு,இசை ,நடனம் வாத்தியங்கள் மூலம் தங்கள் பண்பாட்டு இருப்பை மற்றவர்களும் பேசும் அளவுக்கு நிலை நிறுத்தியுள்ளன.
ஆனால் சில சமூகங்கள் தாங்கள் வாழும் சூழலில் தம் பழமையயயும் பண்பாட்டையும் மொழியயயும் கலாசார மரபுகளையும் மேல் நிலையாக்கம் எனும் மாய வலைக்குள் அள்ளுண்டு போனதையும் நாம் காண முடியும்.
ஈழத் தமிழ் சமூகமும் பல சமூகங்களின் இணைவில் அவரவர்களின் தனித்துவ குணாம்சங்களுடனேயே தன்னை தக்க வைத்துக் கொண்டு வந்துள்ளது.இடையிடையே மேல் நிலையாக்கம் நம்மை இடை மறித்தாலும் இயக்கர் நாகர் ஆதிக் குடிகள் தொடக்கம் இன்று வரை ஒரு நீண்ட பண்பாட்டு வரலாறு நமக்கு உண்டு

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி