வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Sunday, 11 March 2018

மனம் வெட்டி செல்லும் கிளிவெட்டி

மனம் வெட்டி செல்லும் கிளிவெட்டி


மாவலியாள் வந்து விழுந்து
வளைந்து வளம் சேர்க்கும்
வண்ணத் தமிழ் ஊர்
பொன்னாய் வயல் விளைய சென்னெல்
கதிரறுக்கும்
கிள்ளைகள் விளையாட்டால்
கிளிவெட்டியான தொல்லூர்
நெல்லும் நீள் வாழைத் தோட்டங்களும்
நன்னீரும் நல்ல மனிதர்களும்
முன்னோராய் தோன்றி மறைந்த
முது ஊர் கிளிவெட்டி
தயிரும் பாலும் தண்ணியாய் இங்கிருக்க
ஆம்பல் பூக்கள் அழகுற வாய் விரிக்கும்
தேம்பல் இல்லா வாழ்வு இவர்க்கு
திசையெங்கும் புகழ் படைத்த மாந்தர் கொண்ட ஊர்
தமிழர் வரலாற்றில் தனி இடம்
எப்போதும் இதற்குண்டு
தங்கத்துரையென்னும்_தங்க
தமிழ் தலைவன் வந்துதித்த பொன்னூர்
இனம் கொண்ட மறவர்களின்
இன்னுயிர் ஈந்த திருவூர்
கலவரங்கள் வந்த போதெல்லாம்
எல்லை காவலாய் களம் கண்டு-நம்
மனம் வெட்டிச் செல்லும் கிளிவெட்டி

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி