வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Monday 12 March 2018

கடந்து வந்த அறுபது ஆண்டுகள்

கடந்து வந்த அறுபது ஆண்டுகள்

ஒரு மனிதனின் வாழ்வில் அறுபதாண்டுகள் என்பது மிக நீண்ட பயணம் பலருக்கு இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை.சேனையூர் எனும் சிறிய கிராமம் எல்லாளன் குளக்கோட்டன் என வரும் தொன்மங்கள் சுமந்த என் கிராமம் .அப்பா காளியப்பு பாலசிங்கம் அம்மா குமாரசாமி தெய்வநாயகம்
செல்வாக்குள்ள குடும்பத்தில் பிறந்தாலும் என் இளமைக் காலம் வசதிகள் அற்ற வாழ்வுதான்.
பல வேளைகளில் சாப்பாடு இல்லாமலேயே பள்ளிக்கூடம் போவேன்.இரவு உணவு மட்டும் கிடைக்கும் .ஒரு உடையயை வைத்துக் கொண்டு பள்ளிகூடம் போன நாட்களதிகம் இவை எல்லாவற்றையும் தாண்டி பரிட்சைகளில் வெற்றி பெற்றேன் குடும்பம் எனக்கு உறுதுணையாய் இருந்தது.அம்மா அப்புச்சி சகோதரங்கள் என அன்பின் நீட்டசி.

படசாலையில் என் ஆசான்கள் கைதூக்கி விட்டார்கள் கல்வி கலை விளையாட்டு எல்லாவற்றிலும் நான் நானாக இருந்தேன்.பரிசுகள் பாராட்டுகள் நீண்டன
கிராமத்து வாசிகசாலை எனக்கு போதிமரமானது,வாசிப்பு எனக்கு வேதமானது.
பல்கலைக்கழக வாசல்கள் திறந்தன புகுந்தேன் புதியவற்றை கற்றேன் மாக்சியம் என்னை ஆதர்சித்தது இலங்கயின் புகழ் பூத்த அறிஞர்களின் நிழல் என்னில் பட்டது கல்வியாளனாய் திரும்பினேன் .
அரச உத்தியோகம் விவசாய விரிவாக்க அதிகாரி ஆறுமாதங்கள்தான் அதன் பின் ஆசிரிய தொழில் பொலநறுவையில் பின்னர் சொந்த ஊர்நான் கல்வி கற்ற சேனையூர் மகாவித்தியாலயம். பிரதி அதிபராக இன்றய திருகோணமலை விபுலானந்தா வித்தியாலயத்தில்
1988.ல் காதல் திருமணம் என் வாழ்க்கைத் துணையாக பிரமிளாவின் வரவு 1990ல் என் அழகு மகள் அனாமிகாவின் உதயம்.
1992ல் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரயாளராக நுண்கலைத்துறையில்.துறைத்தலைவராக,பீடாதிபதியாக,இணைப்பாளராக பல வேளைகளில் பதில் உப வேந்தராக பணிகளை தொடர்ந்தேன்.
அரசியல் இளமையில் தமிழ் இளைஞர் பேரவை,ஈழவிடுதலை இயக்கம்(தமிழ் ஈழ விடுதலை இயக்கமல்ல)ஈழப் புரட்சியமைப்பு
இன்று ஒரு மாக்சியனாக தொடரும் பயணம்.
கலை இலக்கியம் முற்போக்கு முகம் ஈழத் தமிழர்களின் தனித்துவமான இசை நடன உருவாக்கம் ஈழ நாட்டியத்தின் உருவாக்கம்.அனாமிகா பதிப்பகம் 24 நூல்கள்.
2004ல் சுனாமியில் கரைந்து போன மகள் அனாமிகா நினைவுக் கடலாய் என்னுள் அவள்.2006ல் மகன் அனாமிர்தனின் அதிசய பிறப்பு
என் வாழ்வுக்கான பிடிப்பாய்.
2006ல் கடத்தப் பட்டு புலம் பெயர் தேசத்துக்கு தூக்கியெறியப் பட்ட துயரம்.வேரிலிருந்து புடுங்கி எறியப் பட்டேன்.சவால்கள் நிறைந்த வாழ்வு.ஒட்டவில்லை ஓடவும் முடியவில்லை மிச்சமென்ன மீதி...........
என் பிறந்த நாளை உறவுகளும் ஊரவரும் என் நண்பர்களும் மாணவர்களும் சேர்ந்து கொண்டாடினர் மகிழ்வின் தருணங்கள்
.
முகமறியா முக நூல் தோழமைகள் வாழ்த்து சொன்னார்கள் எத்தனை மகிழ்ச்சி.நெருங்கிய உறவுகள் பலரின் வாழ்த்தும் வருகையும் நண்பர்களின் அன்பும் என் வீட்டை விழாக் கோலமாக்கியிருந்தது.
என் ஆசான்கள்,மாணவர்கள்,தோழர்கள் நண்பர்கள் என வாழ்த்துக்கள் என்னை உற்சாகத்தில் ஒய்யாரமிட வைத்தன.வாழி நீவிர்.....
ஆனாலும் சின்ன நெருடல் சில நெருங்கிய உறவுகளின் வாழ்த்து வரவில்லை....

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி