வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Monday, 12 March 2018

சேனையூரில் கல் வேலி

சேனையூரில் கல் வேலி

நான் அறிந்த வரையில் சேனையூரில் மட்டுமே கிடைக்க கூடிய பார் கற்கள் .பல நூறுவருசங்களாக இந்த பார் கற்களில் வேலி கட்டும் மரபு தொடர்கிறது.200வருசங்களுக்கு முற்பட்ட சேனையூர் கல்வேலி
..
''கூம்பு முகை அவிழ்த்த குறுஞ் சிறைப் பறவை
வேங்கை விரி இணர் ஊதி, காந்தள்
தேனுடைக் குவிகுலைத் துஞ்சி, யானை
இருங் கவுட் கடாஅம் கனவும்,
பெருங் கல் வேலி, நும் உறைவு இன் ஊர்க்கே.''


என சங்க இலக்கிய பாடல் கல்வேலி பற்றி குறிப்பிடுகிறது
 மனித நாகரிகம் புராதன பண்புகளுடன் பேணப்படும் முறைமையில் அதன் தொன்மையயை கண்டு கோள்ள முடியும்.ஐம்பது ஆண்டுகளுக்கு முன் சேனையூர் பிள்ளையார் கோயிலில் இருந்து ஊற்றடி வரை இந்த கல் வேலிகள் தொடர்ச்சியாக அமைக்கப் பட்டிருந்தன காலப் போக்கில் அவை கம்பி வேலிகளாக மாறினாலும் இன்னமும் அதன் எச சொச்சமாக மருத்அ நகரில் ஊற்றடியயை அண்டிய சில வளவுகளில் அழிந்தும் அழியாத வகையில் இந்த கல் வேலிகளை காணலாம் .

சேனையூரின் வரலாற்றுப் பக்கங்களில் அதன் பழமையயை நிலை நிறுத்தும் தடங்களில் கல்வேலியும் முக்கிய பங்கு வகிக்கிறது.கிட்டத் தட்ட இரண்டாயிரம் வருச தொடர்ச்சியின் நீட்சி இந்த கல் வேலிகள்.

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி