வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Saturday 3 March 2018

உலகத் தாய் மொழி நாள்

உலகத் தாய் மொழி நாள்
இன்று உலகத் தாய் மொழி நாள் உலக வரலாறு அதன் பண்பாடு கலாசார மரபுகள் மொழி சார்ந்தே பேசப் படும் ஒரு பண்பாட்டு பரவலாக்கம் மொழியின் அடிப்படையயையே முதன்மைப் படுத்துகிறது.
பல்லாயிரம் மொழிகள் உலகம் முழுவதும் பேசப் படுகின்றன அவற்றில் பேச்சு மொழி மட்டுமான மொழிகளும் ,எழுத்து வழக்கும் பேச்சு வழக்கும் உள்ள மொழிகளும்,தனியா இலக்கிய வழக்குடன் தங்கிப் போன மொழிகளும் என வாழ் நிலையில் உள்ளன பல மொழிகள் அழிந்து போயுமுள்ளன .
உலகில் தோன்றிய மொழிகளில் மிகப் பழமையான மொழிகளில் தமிழ் மொழியும் என்பதில் நாம் பெருமை கொள்ள பல விடயங்கள் நம் மொழியயை சிறப்புப் படுத்துகின்றன மிகப் பழமை மிகுந்த இலக்கிய இலக்கண மரபும் தமிழ் மொழிக்கு உண்டு.
ஒவ்வொருவருக்கும் அவர்கள் தாய் மொழி அவர்களது பண்பாட்டு நினைவுகளுடன் இணைந்து வருவது.மொழி உணர்வு சம்பந்தப் பட்டது உணர்ச்சி வழி நம் மொழி உணர்வு தூண்டப் படுவதும் அதனடிப்படையிலான சமூக கலாசார பண்பாட்டு நகர்வுகள் தீர்மானிக்கப் படுவதை உலக வரலாற்றின் பல பக்கங்கள் நமக்கு பாடமாக அமைகின்றன.
உலகத் தாய் மொழி நாள்
பெப்ரவரி 21 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. 1952ஆம் ஆண்டு இன்றைய பங்களாதேஸ் அன்றைய கிழக்குப் பாகிஸ்தானில் டாக்ஜாவில்வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் பல மாணவர்கள் இறந்து போயினர். அவர்கள் நினைவாக இந்த நாள் சர்வதேச அளவில் தாய் மொழிகளைப் போற்றும் கொண்டாட்ட நாளாக அமைந்துள்ளது.
பங்களாதேஸ் அரசின் பெரு முயற்சியும் சர்வதேச அமைப்புகளின் ஆதரவும் கனிந்து வர ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (யுனெஸ்கோ) அமைப்பின் 1999, பெப்ரவரி 21 பொது மாநாட்டின் 30 ஆவது அமர்வில் இந்த நாளை சர்வதேச தாய் மொழிநாளாக அறிவித்தது. பல்வேறு சமூகங்களின் மொழி, பண்பாட்டுத் தனித்தன்மைகளைப் பேணுவதுடன் அவற்றுக்கிடையிலான ஒற்றுமையையும் உருவாக்கும் எண்ணத்தோடு இந்த நாளை யுனெஸ்க்கோ அறிவித்தது. 2000 ஆம் ஆண்டு தொடக்கம் உலகம் முழுவதும் சர்வ்ச்தேச தாய் மொழி நாளாக கொண்ட்டாடப் பட்டு வருகிறது.
இந்த நாள் உலகத் தாய் மொழி நாள் நம் தாய் மொழியயை அதன் பெரும் பண்பாட்டை நம் செழுமை மிகு இலக்கிய மரபை அதன் வழி இன்று வரை நீளுகின்ற இலக்கிய செல் நெறிகளை கொண்டாடுவோம்.
தாய் மொழிக் கல்வியின் அவசியத்தை உணர்த்தி போலித் தனமான வேற்று மொழி மோகத்தை உணர்த்தி தாய் மொழியிலேயே அனைத்து கல்வி நெறிகளையும் உருவாக்குவோம்.
நம் மொழி தந்த கலை கலாசார பண்பாட்டு நெறி வழி பயணிப்போம்.
இந்த உலக தாய் மொழி நாளில் என் தமிழ் பேராசான்களை நினைவு கொள்ளும் நாளாகவும் நான் பார்க்கிறேன்
என் கைபிடித்து அ எழுதிப் பழக்கிய கந்தவனம் அய்யாவும் சிவபாக்கியம் அக்கா
சின்ன வகுப்பில் தமிழ் பாடம் பயிற்றுவித்த பெரிய ஐயா திருமிகு.நடராசா அவர்கள் இடைநிலை வகுப்பில் தமிழ் சொன்ன திருமிகு கதிர்காமத்தம்பி ஐயா,தமிழ் இலக்கியம் கற்பித்த திரு.சி.இராசரத்தினம் ஐயா,உயர் தரத்தில் தமிழ் தந்த இலக்கிய ஆசான் திருமிகு.வ.அ.இராசரத்தினம்,திரு.தா.ஜெயவீரசிங்கம்.
ஈழத் தமிழின் இலக்கிய பெரும் ஆளுமைகள்
பேராசிரியர் சு.வித்தியானந்தன்
பேராசான்.க.கைலாசபதி
பேராசான்.கா.சிவத்தம்பி
ஆகியோர் நினைவிலும் இந்த நாள் சிறப்பு பெறுகிறது.
இன்றைய நாளே என் இலக்கிய ஆசான் என்னை தன் இலக்கிய வாரிசாக அறிவித்த இலக்கிய கலாநிதி வ.அ.இராசரத்தினம் அவர்களின் நினைவு நாளுமாகும்.
தமிழாய் எழுவோம் தமிழராய் வாழ்வோம்

21.02.2018

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி