செவ்வந்தி
எங்கள் பஸ் சிவனொளி பாத மலை அடிவாரத்தில் போய் நின்றது ஆசிரியர்கள் எங்களை வழி நடந்த அந்த சுற்றுப் பயணம் இந்த பயணம் தொடங்குவதற்கு முதலே அவள் என்னிடம் கேட்டாள் "ருவர் வாறிங்களா "
என்று நான் இல்லை என்று சொல்ல அவள்தான் எனக்கு பணம் கட்டினாள்.நான் இல்லாவிட்டால் ருவர் சோபிக்காது என்று மற்றவர்களிடம் சொல்லியிருக்கிறாள் செவ்வந்தி.
பஸ்சிலிருந்து எல்லோரும் இறங்கிக் கொண்டிருந்தார்கள் அவள் மற்றவர்களை முன்னே விட்டு நான் பின் பகுதியில் இருந்ததால் பின் பக்கம் நகர்ந்து வந்து என்னோடு இறங்கினாள்.கண்களால் என்னை கட்டிப் போட்டிருந்தாள் அந்த கணத்தில் அவள் கண்களுக்குள் விழுந்து ஆறுமாதமாகியிருந்தது அது தனிக் கதை.
ஆறு மாதங்களுக்கு முன் .... என் வகுப்பில் எப்போதும் நான்தான் முதலில் போவது வழக்கம் அன்று எனக்கு முன்னாக அவள் நின்றிருந்தாள் "வகுப்புக்கு புதுசா என்ன பெயர் " என்று கேட்க செவ்வந்தி என்றாள்
."நான் ஒரு வருசத்துக்கு இங்கதான் படிக்க போறன் எங்க இருக்கிறதென்று தெரியல்ல "
என் வரிசைக்கு நேரே பெண்கள் இருக்கையில் ஒரு இடம் இருந்தது அதில் அவளை இருத்தினேன்.முதல் பார்வையிலையே நான் அவளில் ....உரையாடல் நீண்டது தம்பலகாமம் என்றாள் தன்னூரை
நானும் தம்பலகாமத்தில் எனக்கு சொந்தங்கள் என்று கூறி என்னை அறிமுகப் படுத்த தெரியும்
"உங்கள் சொந்தம்தான் நானும்" என்று இடை மறித்தாள்
செவ்வந்தி செவ்வந்திதான் அவள் மூக்கு வாய் கன்னம் என எல்லாம் அளந்து செய்த வடிவாய் மயங்கித்தான் போனேன் நான் .
அவள் கதைத்தாள்
"உங்கள எனக்கு தெரியும் நீங்க நல்லா பாடுவிங்க நடிப்பிங்க பேசுவிங்க பாத்திருக்கன் உங்கள"
எங்க என்று வியப்போட கேட்டன் " எங்கட கோயில் திருவிழாவில என்றாள்.
தம்பலகாமத்து வயல்களுக்கு எப்போதும் ஒரு சிறப்புண்டு எல்லாக் காலங்களிலும் விளைந்து சிரிக்கும் அப்படியே அங்கு பூக்கும் செவ்வந்தியாய் சிரித்து நின்றாள் அவள்
தம்பலகாமம் அழகிய இயற்கை எழில் மிக்க கிராமம் அழகு கொட்டிக் கிடக்கும் வயல்களும் இடையிடையே திட்டு திட்டாய் மக்கள் குடியிருப்புகளும் கோயிலும் சுனைகளும் சூழ பார்த்துப் பார்த்துப் பூரித்துப் போகும் அழகு.அவள் ஊரைப் போலவே செவ்வந்தியும் அழகு.புன்னகை மாறா முகம் சிரித்தால் கே.ஆர் விஜயா தோற்றுப் போகும் சிரிப்பு.
எங்கள் வகுப்பறை அவள் வரவால் புதிய பொலிவு கண்டது கொஞ்சம் சீரியசும் கொஞ்சம் விளையாட்டும் கொண்ட பெண் அவள்.
அவள் வந்த நாள் மாணவர் மன்றம் நடை பெறும் நாள்.
நான் மாணவர் மன்ற தலைவர் .
உயர் வகுப்புக்கு யாராவது வந்தால் அவர்கள் மாணவர் மன்றத்தில் ஏதாவது நிகழ்ழ்சி செய்யணும் மாணவர் மன்றம் நடந்து கொண்டிருந்தது நான் "செவ்வந்தி இப்போ மேடையில் "
என அறிவிக்க மேடையேறினாள் "நான் ஒரு பாடல் பாடுகிறேன் " என சொல்லி பாடத் தொடங்கினாள்
"உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்
என்னைப் பாடச் சொன்னால் என்ன பாடத் தோன்றும் "
என குயிலாய் குழைந்தது அவள் குரல்
அவள் பாட பாட நான் இந்த ஒரு நாளிலேயே அவளுள் கலக்க ஆரம்பிதேன் என நினைக்கிறேன் பாடி முடிய ஆசிரியர் மாணவர்கள் அனைவரும் நிறைந்த கரகோசம் வழங்கினர்.
ஒவ்வோர் நாளும் அவளும் நானும் வகுப்புக்கு முதல் யார் வருவது என்பதில் போட்டி.என்னில் மிகுந்த கரிசனம் கொண்டாள் எனக்குள் கேள்வி இது காதலா கரிசனையா குழம்பி போய் மெல்லவும் முடியாத விழுங்கவும் முடியாத ஒரு தவிப்பு.ஆனால் அவள் எதுவும் யெரியாதவள் போல சாதாரணமாகவே இருப்பாள்.என்னுள் காதல் மயக்கம் தொடர்ந்து கொண்டே இருந்தது.
அடிக்கடி தம்பலகாமம் போயிருவாள் அவள் இல்லாமல் என் தவிப்பு நண்பர்களும் அறியாத உணர்வாய் என்னுள் கவிந்து கிடந்தது

No comments:
Post a Comment