வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Sunday, 11 March 2018

கல்லும் உருக கவி பாடும் சம்பூர்

கல்லும் உருக கவி பாடும் சம்பூர்


வில்லுக் குளமும்
விரிந்த வயல் வெளிகளும்
சொல்லும் புலவனும்
கல்லும் உருக
கவி பாடும் சம்பூர்

கோணேசர் கல்வெட்டு
குறித்த நியமங்கள்
குடிவழி முறமைகளால்
கொண்டாடும் நல்லூர்
கற்கால மனிதர்களின்
வாழ் தடங்கள் கொண்ட
நெற்கதிர்கள் கோலமிடும்
வல்லூராம் இவ்வூர்
கடலின் அழகும்
கால் பதிக்கும் தோனாக்களும்
மடல் வாழை முத்தமிட
நெடும் தாழை
மலர் விரிய
கடம்ப மலர் சொரியும்
காராளர் பதியிதுவாம்
காளி புடை சூழும்
காட்டுத் தேங்காய் மரமும்
கதை சொல்லும்
ஊழித்தாயின் ஒளி பெற்று
வாழ்வு சிறக்கும் நன்னூர்
புரட்சிகர தோழர்கள்
இங்கிருந்து புறப்பட்டார்
எழுச்சியுறு வீரத்தால்
ஈழக் கனவில்
காவியமாய் கரைந்திட்டார்

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி