வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Wednesday, 7 March 2018

மத்தள மலை

மத்தள மலை



மத்தள மலை
எங்கள் மலையே
தமிழர்
மதிப்புறு வரலாறும் அதுவே
செத்திடும் போதிலும்
காப்போம்
சொத்தென போற்றி
வாழ்வோம்

செப்பிடும் கல்வெட்டுக்கள்
எம் சீரான வரலாற்றை
சொல்லும்
கொட்டியாரத்து மன்னர்கள்
கொடி கட்டி ஆண்ட
எங்கள் நிலம்
குளக்கோட்டு மன்னனும்
கோணேசர் கல் வெட்டும்
முந்தய வரலாறு
எந்தையரும் முந்தையரும்
முடிவிலா வரலாறாய்
வாழ்ந்த இடம்
சொந்தம் கொண்டாட
சூழ்ச்சியின் ஆட்சி
வெந்திட வைப்போம்
முன்னைக்கு முன்னோர்
மூதாதையரின்
செந்தமிழ் பூமியிது
குடை வரை கண்ட
கோணேசர் நியமங்கள்
சொன்னபடியான சொந்த நிலமிது
பல்லாயிர வருச பழைமயில்
வழமை மாறா
தமிழர் நிலமிது
ஆசையயை அறுத்து அமைதி கண்ட
புத்தனின் பெயரால்
போக்கிரி ராஜாங்கம்

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி