வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Sunday 11 March 2018

புழுவாய்ப் பிறக்கினும்"


புழுவாய்ப் பிறக்கினும்"

தமிழில் வந்த பரீட்சாத்த நாடகங்களில் ஒன்று பாண்டிச்சேரி கணேசனது நாடகப் பனுவல். பாண்டிச்சேரி கணேசன் பேராசிரியர் ஆறுமுகத்தின் மாணவன் நானும் பேராசிரியர் ஆற்முகத்தின் மாணவந்தான் .நாம் எதற்காக வாழ்கிறோம் யாரோடு போராடுகிறோம் எல்லாம் ஏன் என்ற கேள்விகளூடு சமூக விமர்சனத்தை வித்தியாசமான நாடக மொழியிலும் உடல் மொழியிலும் சொன்ன நாடகம்.
பாண்டிச்சேரியில் கணேசனால் ஒரு சில மேடையேற்றம் கண்ட இந்நாடகம் 1997ல் என்னால் நெறியாள்கை செய்யப் பட்டது கிழக்குப் பல்கலைக் கழகத்திலும் பின்னர் தேவனாயகம் மண்டபத்திலும் மேடையிடப் பட்டது.
அன்றய நாளில் கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப் பட்டன நாடகத்தை பார்த்த பல நாடகர்கள் நாடகம் விழங்கவில்லை என்று கூறியதோடு நான் பயன் படுத்திய உடற்பொறி முறை நடிப்பு பற்றியும் விமர்சித்தனர்.இன்று விரிவுரையாளராயிருக்கும் சு.சீவரத்தினம் மிகக் கடுமையான விமர்சனங்களை முன் வைத்த கட்டுரை பத்திரிகைகளில் வெளிவந்தது.
மட்டக்களப்பு குறிப்பாக ஈழத்து தமிழ் நாடகம் காணாத அரங்களிக்கையாக அது அமைந்தது.பலர் பாராட்டினர் நாடகத்தை ஒவ்வொருவரும் விளங்கிக் கொண்டதை வேறு பட வெளிப் படுத்தினர்.சமகால அரசியல் சூழ் நிலைகளோடு பொருத்திப் பார்த்தனர்.இன்றைக்கு கூட புழுவாய்ப் பிறக்கினும் நாடகம் நம் அரசியல் பகைப் புலத்தில் பொருத்திப் பார்க்கக் கூடிய பண்புகளை கொண்டது.
ஒரு நாடகம் எல்லாக் காலத்துக்குமான மொழியயை பேசவேண்டும்.
புழுவாய்ப் பிறக்கினும் நாடக நடிகர்களாக பல்கலைக் கழகத்தின் பல்வேறு பீடங்களை சேர்ந்த மாணவர்கள் பங்கு கொண்டனர்.பாய்தல் உருளுதல்,குதித்தல்,தவழுதல்,நக்குழுவுதல்,தாண்டல் ,என உடலை எப்படியும் வளைக்க கூடிய பயிற்சிகளாய் அமைந்தன.என் மாணவர்கள் ராணுவ பயிற்சி போல இருக்கு என பயிற்சியின் கடுமையயை எடுத்துக் காடினர்.உண்மையில் ஒரு நாடக நடிகன் இராணுவ கட்டுப் பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும்.
நாடகம் வாயால் பேசுவதை விட உடலால் பேச வேண்டும் என்ற கொள்கையுடையவன் நான்.உடல் மொழி சார்ந்ததே அரங்கு இரண்டு பேர் கதிரை போட்டு உட்கார்ந்து கொண்டு பேசுவது அரங்காகாது.அரங்கிற்கு அசைவுறும் தன்மை வேணும்.
பல்கலைக் கழகத்த்கில் என் நாடகங்களுக்கான பார்வையாளர்களில் அங்கு வேலை செய்யும் கல்வி சாரா ஊழியர்கள் எப்போ சேர் அடுத்த நாடகம் என ஆர்வத்துடன் கேட்டு உற்சாகப் படுத்துவர்.நான் எது கேட்டாலும் மறுக்காமல் உதவி செய்யும் பண்பினர்.பராமரிப்பு துறையினர் என் நாடகங்களுக்கான மேடைப் பொருட்களை அழகுற என் சிந்தனைகளுக்கு ஏற்ப வடிவமைத்து தரும் வல்லுனர்கள்.புழுவாய்ப் பிறக்கினும் நாடகத்திற்கு ஒரு பல்லக்கு தேவைப் பட அதனை அழகுற செய்து தந்தனர்.பராமரிப்பு துறையில் வேலை செய்த பலர் என் நினைவுக்கு வருகின்றனர்.என் நாடகங்களின் தீவிர ரசிகர்கள் அவர்கள்.இரவிரவாக மேடைப் பொருட்களை தங்கள் பட்டறையில் வைத்து செய்து தருவர்.என் நாடகங்களின் முதல் பார்வையாளர்களும் அவர்களே.ஏனெனில் ஒத்திகை நேரங்களில் நாடகங்களை அதன் ஒவ்வொரு படி நிலையிலும் பார்த்து ரசிப்பர்.
புழுவாய்ப் பிறக்கினும் நடிகர்கள்

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி