4.சேனையூர் உலா
சீர் மிகுந்த சிற்றாறு சூழும்
தேரூரும்
வீதித் திருவுடய பாரூரும்
பண்பாட்டுப்-புகழ் படைத்த
வர்ணகுலத்து மீகாமக் குடி
வாழும்
காரேறும்
வளநாடாம் சேனையூர் தனைப்
புகழ்ந்து-பாடுகின்ற
ஊர் தலத்து பெருமை சொல்லிடும்
நேர் மிகுந்த கவி வாணர் சொல்லேறும்
புகழுடையூர்.
பவள மல்லி வாய் திறக்க
வடிவுடைப்
பன்னீர் பூக்கள் நறவீண
பைந்தமிழ்
சுவையுறு தேன் தமிழ் கொண்டிடும்
கனி மொழி பேசிடும் பாவையர்-கூடிய
விழவுறு நாட்களும் முழவும்
இசையுமாய்
கவினுறு கலைகள் கொண்டாடிடும்-சேனையூர்க்
காட்சிகள் நீண்டிடும் மாலைப்
பொழுதுகள்
மண்ணில்
சோலையும் நீரும் சுந்தரத்
தமிழும்
தாவிடும் காளைகள் தண்டமிழ்
வாடை
தூவிடும் மலர்கள் சொரிந்திடும்
மாலையாய்
காவிடும் வாசனை கரிய குன்றுகள்
தூவிடும் வானத்தின் துகளென
நிமிரும்
மாதலத்து
சலசலத்து ஓடும் சாரல் மழையின்
மாரி காலத்து ஆரைப்பத்தையருவி
நீட்டத்து
கால வெள்ளமும் கடந்து தொடரும்
வரலாற்றின் வழியில் வந்த
முன்னவர்
எல்லாம்
போற்றும் எங்கள் சேனையூர்
காண
இந்திர லோகத்து மாந்தரும்
வந்தனர்
இன்பத்து
எல்லாம் எழிலாய் அழகாய் அறிவாய்
வளரும் எங்கள் ஊரின் உலா
வரும்
இன்பப் பொழுது
No comments:
Post a Comment