வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Sunday, 11 March 2018

மரண வாசல்

மரண வாசல்
நான் மரண வாசல் வரை
சென்று மீண்டவன்
மரணத்தை சுவைக்க
காத்திருந்தேன்
என்னேரமும் மரணம்
நிகழலாம்
என்ற நிலமை
பகலிலா இரவிலா
அல்லது
இரணிய நேரத்திலா
நிச்சயமில்லா
பதகளிப்புடன்
நான் இருந்த நாட்கள்
துப்பாக்கி குண்டுகள்
என்னை பதம் பார்த்து
நான் தூக்கியெறியப் படலாம்
நினைத்திருந்த பொழுதுகள்

மீளவும் மீளவும்
மரண வாயிலில் நான்
கண்டுகொள்ளப் படாத
விண்ணப்பங்கள்
சலனமற்றிருக்கும்
சிம்மாசனங்கள்
முடி சூடலும்
முதுகு சொறிதலுமான
அபத்தங்களின்
நீட்சி
விருதுகளும் பட்டங்களும்
காற்றில் பறக்க
கடத்தல் நாடகம்
மலைகள் மீது
உலா வர
வான் வெளியெங்கும்
புட்பக விமானத்தில்
இராவணனின்
வெற்றி உலா

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி