சேனையூர் எனும் திருவூர்
பொன்னாவரை பூத்திருக்கும்
புதுத் தாழை மலர்ந்திருக்கும்
சென்னெல் விழைந்திருக்கும்
சிங்காரச் திருவூர் என் சேனையூர்
கண்ணாச் செடியழகு
கண்டல் மடல் அழகு
சொண்டான் பழம் அழகு-தமிழ்
சொல்லால் என் ஊர் அழகு
தென்னம் பழம் சொரியும்
தேமாங்கனி உதிரும்
சின்னக் குயில் பாடும்
மெல்ல மயில் ஆடும்
வயல்கள் சூழ்ந்திருக்க
வாழ்வோடு ஆறிருக்க
குழங்கள் நிறைந்திருக்க -நாம்
கொண்டாடும் சேனையூரே
ஏர் பிடித்து தரை உழுது
நார் உரித்து சூடாக்கி
கார் பிடித்து போரடிக்கும்
என்னூரான் சேனையூரான்
சுண்ணக் கல் பிளந்து
சுத்த நீர் கிழித்து
பயிர்கள் விளைவித்து
பயன் பெறுவான் என்னூரான்
தேரோடும் வீதியெலாம்
செவ்வியலார் பூ மணக்கும்
கமுகமரம் பூச்சொரியும்
காரிகையர் குழல் சரியும்
கும்பம் ஆடி வர
குதுகலித்து மக்கள் கூட
சிலம்பம் சுழற்றி வரும்
சேனையூர்க் காளையரே
சித்திரயாள் பிறந்து விட்டால்
சிறப்புக்கு பஞ்சமில்லை
சீர் ஊஞ்சல் ஆடிடுவர்
போர்த்தேங்காய் கூடிடுவர்
கலைகள் இங்கு பிறப்பெடுக்கும்
காற்றும் இங்கு கவிபாடும்
கூத்தும் இசையும் கூடிவரும்
காணக் கண்கள் கோடி பெறும்
அழிவுகள் அவலங்கள்
சுற்றி நின்று சுட்ட போதும்
எட்டி உதைத்து எகிறி தாவி
மீண்டெழுந்தான் என்னூரான்
வர்ண குலத்தாரின்
வரலாற்று தடங்களிலே
முது குடியாய் காலமிடும்
சேனையூராய் சிறப்பு பெறும்
கண்டல் மடல் அழகு
சொண்டான் பழம் அழகு-தமிழ்
சொல்லால் என் ஊர் அழகு
தென்னம் பழம் சொரியும்
தேமாங்கனி உதிரும்
சின்னக் குயில் பாடும்
மெல்ல மயில் ஆடும்
வயல்கள் சூழ்ந்திருக்க
வாழ்வோடு ஆறிருக்க
குழங்கள் நிறைந்திருக்க -நாம்
கொண்டாடும் சேனையூரே
ஏர் பிடித்து தரை உழுது
நார் உரித்து சூடாக்கி
கார் பிடித்து போரடிக்கும்
என்னூரான் சேனையூரான்
சுண்ணக் கல் பிளந்து
சுத்த நீர் கிழித்து
பயிர்கள் விளைவித்து
பயன் பெறுவான் என்னூரான்
தேரோடும் வீதியெலாம்
செவ்வியலார் பூ மணக்கும்
கமுகமரம் பூச்சொரியும்
காரிகையர் குழல் சரியும்
கும்பம் ஆடி வர
குதுகலித்து மக்கள் கூட
சிலம்பம் சுழற்றி வரும்
சேனையூர்க் காளையரே
சித்திரயாள் பிறந்து விட்டால்
சிறப்புக்கு பஞ்சமில்லை
சீர் ஊஞ்சல் ஆடிடுவர்
போர்த்தேங்காய் கூடிடுவர்
கலைகள் இங்கு பிறப்பெடுக்கும்
காற்றும் இங்கு கவிபாடும்
கூத்தும் இசையும் கூடிவரும்
காணக் கண்கள் கோடி பெறும்
அழிவுகள் அவலங்கள்
சுற்றி நின்று சுட்ட போதும்
எட்டி உதைத்து எகிறி தாவி
மீண்டெழுந்தான் என்னூரான்
வர்ண குலத்தாரின்
வரலாற்று தடங்களிலே
முது குடியாய் காலமிடும்
சேனையூராய் சிறப்பு பெறும்
No comments:
Post a Comment